இங்கிலாந்தின் ரெக்ஸ்ஹாம் என்ற பகுதியில் வசித்து வருபவர் கிறிஸ்டின் மோர்கன் என்ற பெண். 41 வயதான மோர்கன் கணவரை பிரிந்து, தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரின் வீட்டிலிருந்து இரவு நேரங்களில் அதிகமாக சத்தம் வருகிறது என்றும், அதை காதுக்கொடுத்தக் கூட கேட்க முடியவில்லை என அக்கம்பக்கத்தினர் தொடர்ந்து புகார் கூறி வந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக, மோர்கனை 2020ஆம் ஆண்டில் அக்கம் பக்கத்தினர் எச்சரித்துள்ளனர். சத்தமாகப் பாட்டுக் கேட்டதாக முதலில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சத்தத்தைக் குறைத்துக் கொள்ளும்படி அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். அதுமட்டுமின்றி, தொடர்ந்து இதுபோன்று சத்தம் போட்டால், நீதிமன்றம் வரை நேரிடும் என்றும் கூறியுள்ளார். ஆனால், இவை எதற்கும் மோர்கன், 'செவி' சாய்க்கவில்லை. 


மேலும் படிக்க | நேற்று கர்ப்பம்... இன்று குழந்தை - அதிர்ச்சியடைந்த தாய்!


மோர்கன் வீட்டில் பாட்டு சத்தம் மட்டுமின்றி வேறு சத்தங்களும் எழுந்துள்ளன. கணவரை பிரிந்து வாழும் அவர், தனது பல காதலர்களுடன் இரவில் வீட்டில் உல்லாசமாக இருப்பார் என கூறப்படுகிறது.அப்போது, இரவு நேரத்தில் உடலுறவு கொள்ளும்போது அவர் எழுப்பும் சத்தமும் பக்கத்துவீட்டுக்காரர்களை மிகவும் தொந்தரவுக்கு உள்ளாக்கியுள்ளது. 


மெல்லிசான சுவர்களை கொண்ட வீட்டில் மோர்கன் வசிப்பதால், பக்கத்து வீட்டினருக்கு இதுபோன்ற தொந்தரவுக்கு உள்ளாக்கி தூக்கத்தை இழந்துள்ளனர். தூக்கத்தை இழந்ததால், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு உடல்நலக்குறைவை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, இரவில் மோர்கன் எழுப்பும் சத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.இரவில் மட்டுமின்றி அதிகாலை நேரத்திலும் தொடர்ந்து சத்தம் போடுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


போலீஸிடம் இருந்து தப்பிப்பதற்கு, தனது மகன் மீது பழியைப்போட்டுள்ளார், மோர்கன். அதாவது, தனது 23 வயது மகனும், அவனது காதலியும்தான் இதுபோன்ற 'சத்தங்களை' எழுப்புவதாகக் கூறியுள்ளார். இருப்பினும், முன்னர் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையை முறையாக கைபிடிக்கவில்லை என்பதை மோர்கன் ஒப்புக்கொண்டதால், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


நீதிமன்ற விசாரணையின்போது,புகார் அளித்தவர்களின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்,'தொடர்ந்து, பல முறை எச்சரிக்கை கொடுத்தும், மெலிசான சுவரை மாற்றாமலும், அதிக சத்தத்தையும் மோர்கன் எழுப்பியுள்ளார். அவரது பக்கத்து வீடுகளில் வைக்கப்பட்டுள்ள நாய்ஸ் மானிட்டரில், அதிக சத்தம் எழுப்பப்பட்டது உறுதியாகியுள்ளது' என வாதித்திட்டார். 


இதனால், மோர்கனின் பக்கத்து வீட்டுக்காரர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அவர்களின் சொந்த வீடுகளிலேயே நிம்மதியாக வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது எனக் கூறினார். அவர் மீண்டும் மீண்டும் இதே தவறை செய்து வருகிறார் என குற்றஞ்சுமத்தினார். இதற்கு நீதிமன்றத்தில் பதிலளித்த மோர்கன்," எனது வீட்டில் வயதான தந்தை, எனது மகன், மகள் ஆகியோரோடு தான் வசிக்கிறேன். இதுபோன்று வேண்டுமென்ற சத்தம் எழுப்பவில்லை" என்ற விசாரித்தார். 


இதுதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி,"ஒருவர் சுதந்திரமாக உறவு வைத்துக்கொள்வது அவரின் உரிமையாகும். ஆனால், வீட்டில் மெல்லிய சுவர்களை வைத்துக்கொண்டு பக்கத்து வீட்டினருக்கு தொந்தரவை ஏற்படுத்திய காரணத்தால், 300 ஐரோப்பிய டாலர்கள் (சுமார் ரூ. 24 ஆயிரம்) அபராதமாக விதித்து உத்தரவிட்டார். 


மேலும் படிக்க | 'கூட்டு பாலியல் வன்புணர்வு' - ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக நடந்துசென்ற சிறுமி; 2 கி.மீ.,க்கு யாருமே உதவவில்லை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ