ஏப்ரலில் முழு சூரிய கிரகணம்... வாழ்நாளில் மிஸ் பண்ணவே கூடாது - ஏன் இது ரொம்ப முக்கியம்?
Total Solar Eclipse: வரும் ஏப்ரலில் முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ள நிலையில், விஞ்ஞான மெய்ஞான உலகம் முழுவதும் இதுகுறித்த பேச்சாகவே இருக்கிறது. இதற்கு என்ன காரணம், ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பதை இதில் காணலாம்.
Total Solar Eclipse, April 2024: ஒவ்வொரு ஆண்டும் விண்ணில் பல நிகழ்வுகள் நடக்கும். சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்டவை விஞ்ஞான ரீதியாகவும், மெய்ஞான ரீதியாகவும் பலத்த கவனத்தை பெறும் என்பார்கள். அந்த வகையில், இந்தாண்டும் வானில் முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதை சுற்றி இருக்கிறது எனலாம். பலருக்கும் இந்த கிரகணங்கள் உள்ளிட்ட வானில் நடக்கும் நிகழ்வுகளை காண்பதற்கு ஆர்வம் கொள்வார்கள், இருப்பினும் சிலருக்கு இதில் விருப்பம் இருக்காது.
ஆனால், வரும் ஏப்ரல் மாதம் வர இருக்கும் இந்த முழு சூரிய கிரகணம் என்பது இதுகுறித்து ஆர்வம் இல்லாதவர்களையும் ஈர்க்கக் கூடியதாகும். ஆம் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற உள்ள இந்த முழு சூரிய கிரகணத்தை தங்களின் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பார்க்க உலகில் பலரும் காத்திருக்கின்றனர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில், இந்த சூரிய கிரகணம் குறித்த தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
அடுத்த 20 ஆண்டுகளுக்கு நடக்கவே நடக்காது...
இந்த சூரிய கிரகணம் எங்கெல்லாம் தெரியும் என்பதை பின்னால் பார்ப்போம். முதலில் ஏப்ரல் 8ஆம் தேதி ஏற்படக்கூடிய இந்த முழு சூரிய கிரகணம் பலரின் வாழ்நாளில் நடக்கும் கடைசி கிரகணமாக கூட இருக்கலாம். ஏனென்றால் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு அதாவது 2044ஆம் ஆண்டு வரை இதுபோன்ற முழு சூரிய கிரகணம் நடக்கவே நடக்காது என நாசா தெரிவித்துள்ளது. சூரிய கிரகணம் என்றால் நிலவின் நிழல் பூமியில் விழுந்து சூரிய ஒளியை தடுக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இருப்பினும் அதனையும் இங்கு விரிவாக காணலாம்.
இந்தியாவில் பார்க்க முடியுமா?
இதுபோன்ற முழு சூரிய கிரகணம் என்பது மற்ற சாதரண சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் போன்றில்லாமல் மிகவும் அழகானது என்றும் மிகவும் அற்புதமான ஒன்றாகவும் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். முழு சூரிய கிரகணம் குறித்து நாசா கூறுகையில்,"நிலா, சூரியன் மற்றும் பூமிக்கு இடையில் செல்லும்போது பூமிக்கு சூரியனின் முகத்தை முற்றிலுமாக மறைக்கும். எனவே, பூமியில் நிலவின் நிழல் விழும் பகுதிகளில் இந்த முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். பகலோ இரவோ இந்த முழு சூரிய கிரகணம் ஏற்படும் போது முற்றிலும் இருள் சூழந்து காணப்படும்" என்கிறது.
அந்த வகையில், இந்தியர்கள் சற்று துரதிருஷ்டசாலிகள் எனலாம். ஏனென்றால், நிலவின் நிழல் இந்தியாவின் மீது விழாது. எனவே, இந்தியாவில் இருந்து இந்த முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியாது. இந்திய நேரடிப்படி ஏப்ரல் 8ஆம் தேதி இரவு 9.12 மணிக்கு தொடங்கும் இந்த முழு சூரிய கிரகணம், நள்ளிரவு 2.22 மணிவரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதே தயாராகும் அமெரிக்கர்கள்
இது வட அமெரிக்க நாடுகளில் நன்றாக தெரியும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு பின் பின் தற்போதுதான் அங்கு சூரிய கிரகணம் தென்பட உள்ளது. சரியாக 6 ஆண்டுகள் 7 மாதங்கள் 18 நாள்களுக்கு பின் இது அங்கு நிகழ உள்ளது. நிலவின் பாதை, கிரகணம் நிகழும் நேரம் மற்றும் இதன் அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள் காரணமாக இந்த கிரகணம் மற்றவையை விட இன்னும் உற்சாகத்தை தருகிறது எனவும் நாசா தெரிவித்துள்ளது.
குறிப்பாக, 2017ஆம் ஆண்டு நிகழ்ந்தை விட, வரும் ஏப்ரலில் நிகழும் முழு சூரிய கிரகணத்தின் பாதை அகலமாக உள்ளது எனறும் அமெரிக்காவில் இதுவரை பார்த்திராத வகையில் இந்த கிரகணம் அதிகமாக தெரியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. எனவே, வட அமெரிக்க பகுதிகளை சேர்ந்த மக்கள் வரும் ஏப். 8ஆம் தேதி அன்று தங்களின் குடும்பத்தினர், நண்பர்களுடன் சேர்ந்து முழு சூரிய கிரகணத்தை காண திட்டமிட்டு வருகின்றனர். இந்த கிரகணத்தை மக்கள் வெறும் கண்களாலும் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியாக 2044ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி அன்றுதான் இதுபோன்ற சூரிய கிரகணம் நிகழும் என்றும் இருப்பினும் இதுபோன்ற அகலாமாக இல்லாமல் குறைவான பகுதிகளிலயே அந்த கிரகணம் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ