சமீப காலங்களில் அமெரிக்க காங்கிரசில் நடக்கும் உயர் நிலை விசாரணைகளில் ஒன்றாக, உலகின் நான்கு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பேரவை நீதித்துறை குழுவின் முன் சாட்சியமளிக்க உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேஸ்புக், கூகிள், அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் அமெரிக்க காங்கிரஸ் (American Congress) முன் நான்கு மணி நேர கேள்வி பதில் அமர்வில் சாட்சியமளிப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்க் ஜுக்கர்பர்க், சுந்தர் பிச்சய், ஜெஃப் பெசோஸ் மற்றும் டிம் குக் ஆகியோர் ஆண்டி டிரஸ்ட் சட்டங்கள் (AntiTrust Laws) குறித்து சபைக்கு பதிலளிக்க ஒன்றாக சாட்சியமளிப்பார்கள்.


டிஜிட்டல் சந்தையின் ஏகபோக உரிமை குறித்து தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஊடக அறிக்கைகளின் படி, மார்க் ஜுக்கர்பர்க் பேஸ்புக்கை ஒரு பெருமைமிக்க அமெரிக்க நிறுவனமாக சித்தரிக்கப் போகிறார். போட்டி மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் அமெரிக்காவின் சட்டங்கள் இல்லாமல் அவரால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதை அவர் குறிப்பிடப்போகிறார்.


உலகின் மிகப் பெரிய பணக்காரரான அமேசானின் ஜெஃப் பெசோஸ், தனது நிறுவனத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும், அதை ஒரு துடிப்பான அமெரிக்க வெற்றிக் கதையையாக அறிவிக்க வேண்டிய அவசியமும் உள்ளது என்றும் சபையில் தெரிவிக்கப்போகிறார். கேட்போர் மத்தியில் தேசியவாத உணர்வைத் தூண்டும் வகையில் அவர் பேச்சு இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.


ALSO READ: 2021 ஜூலை வரை பணியாளர்களை Work From Home செய்யச் சொல்லும் Google


இந்த நான்கு தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்பை ஒன்று சேர்த்தால், அது, ஜேர்மன் பொருளாதாரத்தை விட அதிகமாக இருக்கும். தொழில்துறையில் தங்கள் ஆதிக்கம் குறித்த அதிகரித்து வரும் கவலை மற்றும் இணைய விதிகள் புதுப்பிக்கப்பட வேண்டுமா என்பது குறித்த கேள்விகளுக்கும் சபையில் இவர்கள் பதிலளிப்பார்கள். அறிக்கைகளின்படி, தற்போதைய ஆண்டி டிரஸ்ட் சட்டங்களின் கீழ், இந்த நிறுவனங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்காகவோ அல்லது சந்தையில் ஏகபோக உரிமையை குறிவைப்பது குறித்தோ, அதிகாரிகள் இந்நிறுவனங்களை இலக்காக்குவது சாத்தியமில்லை.


முன்னதாக, புகையிலை, மருந்துகள் மற்றும் பெரிய ஆட்டோமேட்டிவ் நிறுவனங்களின் நிர்வாகிகள் இதேபோல் காங்கிரஸ் முன் சாட்சியமளித்துள்ளனர்.