புதுடெல்லி: தவறான தகவல்களை பரப்புவதில் பேஸ்புக் தான் முன்னணியில் இருப்பதாக COVID-19 பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்கும் ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர். இதற்குப் பிறகு, இரண்டாவது இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள், அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவர்கள் உள்ளனர். சர்வதேச ஊடகவியலாளர்கள் மையம் (ICJF) மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் டோ சென்டர் ஃபார் டிஜிட்டல் ஜர்னலிசம் ஆகியோரால் பத்திரிகைத் துறை மற்றும் COVID-19 குறித்து நடத்தப்பட்ட சர்வதேச ஆய்வில், போலி செய்திகள் பற்றிய தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், பேஸ்புக் சமீபத்தில் வெறுக்கத்தக்க பேச்சு (Hate Speech) தொடர்பான கொள்கைகளில் மாற்றங்களைச் செய்துள்ளது. இது ஆத்திரமூட்டும் மற்றும் உண்மைக்கு புறம்பான அனைத்து உள்ளடக்கங்களையும் தடை செய்கிறது. இருப்பினும், இதற்கு முன்னரே இவ்வாறு செய்யும்படி எழுந்த கோரிக்கைகளை Mark Zuckerberg மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: COVID-19 Vaccine இந்தியாவில் யாருக்கு முதலில் கிடைக்கும்? விவரங்களை அளித்தது மத்திய அரசு


இந்த பிரச்சினையில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட 66 சதவிகித ஊடகவியலாளர்கள் Facebook-ஐ போலி செய்திகளுடன் இணைத்து, தவறான செய்திகளின் முதன்மை ஆதாரம் என்று கூறினர். இந்த ஆய்வில் சம்பந்தப்பட்ட 82 சதவீத ஊடகவியலாளர்கள், தாங்கள் பேஸ்புக் மற்றும் அதன் WhatsApp மற்றும் Instagram ஆகிய இயங்குதளங்களுக்கு தவறான தகவல்களை அவர்கள் அளிப்பது குறித்து தங்கள் கருத்தை தெரிவித்ததாகவும் கூறினர். ஆனால் நிறுவனம் அளித்த பதிலால் திருப்தி ஏற்படவில்லை என்பதுதான் அதில் பாதி பேரின் கருத்தாக உள்ளது. Twitter, Youtube மற்றும் Google Search ஆகியவை பரப்பும் தவறான தகவல்களைப் பற்றியும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் மற்றும் ஊடகங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான உறவைப் பற்றி அறிய 2020 ஏப்ரலில் இந்த பணித்திட்டம் தொடங்கப்பட்டது.  


கணக்கெடுப்பில், அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நைஜீரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களில் பாதி பேர் COVID-19 குறித்து தவறான தகவல்களை பரப்புவதில் அரசியல்வாதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் சமூக ஊடகங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளனர் என்று கூறியுள்ளனர்.


COVID-19 பற்றி தவறான தகவல்களை பரப்பிய வலைத்தளங்களுக்கு ஏப்ரல் மாதத்தில் Facebook-ல் 500 மில்லியன் வியூஸ் கிடைத்தன என்றும், அந்த நேரத்தில் COVID-19 உலகம் முழுவதும் பயங்கரமாக பரவிக் கொண்டிருந்தது என்றும் கணக்கெடுப்பின் முடிவுகள் தெரிவித்தன.


ALSO READ: Good News: Iodine based sanitiser-களை வெளியிடப்போகும் உலகின் முதல் நாடாகப்போகிறது இந்தியா


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR