அல்-ஜசீராவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லே, ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரை நகரமான ஜெனினில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் குறித்த தகவல்களை சேகரிக்க சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்டார். மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமில் ஆய்வு நடத்தியபோது செய்தியாளர் கொல்லப்பட்டார். பத்திரிகையாளர்களுக்கான பிரத்யேக டி-சர்ட் அணிந்திருந்த போதிலும், இஸ்ரேலியப் படைகளால் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரபு மொழி சேனலின் பிரபல பாலஸ்தீன பெண் நிருபர் ஷிரீன் அபு அக்லே சுட்டுக் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜெருசலேமை தளமாகக் கொண்ட அல்-குத்ஸ் செய்தித்தாளில் பணிபுரியும் மற்றொரு பாலஸ்தீனிய பத்திரிகையாளரும் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்தார், ஆனால் அவர் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சம்பவத்தின் வீடியோ காட்சிகளில், அபு அக்லே "PRESS" என்று தெளிவாக எழுதப்பட்ட நீல நிற ஃபிளாக் ஜாக்கெட்டை அணிந்திருப்பதைக் காணலாம். 


மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள் 



Al Jazeera reporter Shireen Abu Akleh | (Photo: Twitter/ @assaf_khuloud)


ஜெனினில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளின் போது தங்கள் படைகள் கனரக தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகளால் தாக்கப்பட்டதாகவும், அதற்கு பதிலடி கொடுத்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியது. "சம்பவம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பாலஸ்தீனத்தை சேர்ந்த துப்பாக்கி ஏந்திய நபர்களால் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும்" ராணுவம் கூறியது. 


ஜெனின் நகரம், குறிப்பாக அதன் அகதிகள் முகாம், நீண்ட காலமாக ராணுவத்தின் கோட்டையாக அறியப்படுகிறது. இஸ்ரேலுக்குள் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தீவிர தாக்குதல்களுக்கு மத்தியில் சமீபத்திய வாரங்களில் இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் தினமும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மிதான பெரும்பாலானபல ஜெனின் மற்றும் அதைச் சுற்றியுள்ள பாலஸ்தீனியர்களால் நடத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | இலங்கை நெருக்கடி: போராட்டக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பித்த அரசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR