கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்று அமெரிக்காவை சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


உலகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தலைவர்களும், ஆராய்ச்சியாளர்களும் தீவிர முயற்சியில் ஈடு பட்டு வருகின்றனர்.  பல்வேறு விதமான தடுப்பூசிகளும் உருவாக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நபர்களும் தடுப்பூசி செலுத்தினால்தான் கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டுவர முடியும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


பல மக்கம் விரும்பி தடுப்பூசி செலுத்திவரும் நிலையில், சிலர் மட்டும் தடுப்பூசி செலுத்துவதை தவிர்த்து வருகின்றனர். இதனையடுத்து, பன்னாட்டு நிறுவனங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.


ALSO READ Covid Vaccine Update: அமெரிக்காவில் Pfizer தடுப்பூசிக்கு முழுமையான அனுமதி


அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து மாதம் 15 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. தங்கள் நிறுவனத்தில் உள்ள மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த தொகையை பிடித்தம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது.  மற்ற ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் போன்று டெல்டா ஏர்லைன்ஸ் தங்களது ஊழியர்களை கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்று கூறவில்லை.  கொரோனா பாதித்த ஊழியர்களின் சிகிச்சைக்கு தலா 37 லட்சம் ரூபாய் செலவாகிறது என்பதால், இந்த அபராதம் விதிக்கப்படுவதாக டெல்டா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.


அமெரிக்காவில் 71.2 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். வரும் செப்டம்பர் 12ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு வாரம் ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் கொரோனா பாஸிடிவ் வரும் பட்சத்தில் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படுவர்.  மேலும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது. 


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR