லாஸ் ஏஞ்சலஸ்: கலிபோர்னியா மாகாணத்தின் அசுசா நகரில் வாக்குப்பதிவு மையம் அருகே துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவத்தில் ஒருவர் பலி. மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். 


அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு நேற்று முடிவடைந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. 


பயங்கர ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபருடன் போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதாக லாஸ் ஏஞ்செல்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


துப்பாக்கி சூட்டில் காயமடைந்தோர், மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே சிகிச்சை பலனின்றி, அதில் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மூவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.