Same Sex Weddingஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் முடிவை கிரேக்கம் நிறைவேற்றியது. இந்த முடிவுக்கு கிரீஸ் நாடாளுமன்றத்தில் 300 சட்டமன்ற உறுப்பினர்களில் 176 பேர் ஆதரித்தனர், 76 பேர் எதிராக வாக்களித்தனர். நேற்று (2024, பிப்ரவரி 15) கிரேக்க நாடாளுமன்றத்தில் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால், அனைவருக்கும் திருமண சமத்துவம் நிறுவப்பட்ட முதல் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ நாடாக கிரீஸ் நாடு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்றத்தின் 300 சட்டமன்ற உறுப்பினர்களில் 176 பேரின் ஆதரவைப் பெற்ற இந்த சட்ட மசோதா பல மாதங்கள் நடைபெற்ற பொது விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது என்றாலும், 76 எம்.பிக்கள் ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் தர ஒப்புக்கொள்ளாமல், மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர்.


ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியதை கொண்டாட ஏதென்ஸின் தெருக்களில் மக்கள் கூடி ஆராவரம் செய்தனர். நாட்டின் LGBTQ+ தம்பதிகள் நாடாளுமன்றத்தின் முடிவை வரவேற்றனர்.


இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட பிரதமர் கிரியாகோஸ், மனித உரிமைகளுக்கான ஒரு மைல்கல்லாக இருக்கும் இந்த முடிவு, இன்றைய கிரேக்க நாட்டை பிரதிபலிக்கிறது. ஒரு முற்போக்கான மற்றும் ஜனநாயக நாடான கிரீஸ், ஐரோப்பிய விழுமியங்களுக்கும் மதிப்புகளுக்கும் உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க | விவசாயிகள் போராட்டம்: அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் இன்று 3 ஆம் சுற்று பேச்சுவார்த்தை


கிரேக்க பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்
"கண்ணுக்குத் தெரியாத பல தன்பாலினத்தவர்கள் நம்மைச் சுற்றிலும் இருந்தாலும், இதுவரை தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாத அவர்கள் இனி தங்களை மறைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. பல குழந்தைகள் இறுதியாக அவர்களின் சரியான இடத்தைக் கண்டுபிடிப்பார்கள்" என்று வாக்கெடுப்புக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் கூறினார்.


"இந்தச் சீர்திருத்தமானது, பலருடைய வாழ்க்கையிலிருந்து எதையும் பறிக்காமல், சக குடிமக்கள் பலரின் வாழ்க்கையை மேம்படுத்துகிறது," என்று அவர் மேலும் கூறினார்.


திருமண சமத்துவம் தேவை என்பது தொடர்பாக LGBT சமூகம் பல தசாப்தங்களாக குரல் எழுப்பி வருகிறது. சமூக ரீதியாக பழமைவாத நாடாக இருக்கும் கிரேக்க நாட்டில், நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு, ஒரே பாலின ஜோடிகளுக்கு திருமணம் மற்றும் குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமையை வழங்கியுள்ளது மிகப் பெரிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


ஓரின சேர்க்கையாளர்களுக்கான சிவில் கூட்டாண்மைகள் ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இடதுசாரி அரசாங்கத்தின் கீழ் கிரேக்க நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அரசாங்கம் அந்த உறவுகளில் உள்ள குழந்தைகளின் உயிரியல் பெற்றோரை மட்டுமே சட்டப்பூர்வ பாதுகாவலர்களாக அங்கீகரித்தது. ஆனால், இந்த புதிய சட்டத்தின்படி ஒரே பாலின பெற்றோர்கள் இப்போது குழந்தைகளின் சட்டப்பூர்வ பெற்றோராக அங்கீகரிக்கப்படலாம்.


தன்பாலின திருமண சட்டத்தை கொண்டாடிய மக்களில் பலர், பைபிளின் சில பகுதிகளைப் பாடி, பிரார்த்தனை செய்தனர், சிலுவைகளை ஏந்தியவாறு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள். இருப்பினும், இந்த நடவடிக்கை "நாட்டின் சமூக ஒற்றுமையை கெடுக்கும்" என்று ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவர், பேராயர் ஐரோனிமோஸ் கவலை தெரிவிக்கிறார்.  


மேலும் படிக்க | மாநிலங்களவைத் தேர்தல்: 7 மத்திய அமைச்சர்களுக்கு வாய்ப்பளிக்காத பாஜக


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ