பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டூலோன் நகரில் உள்ள செயிண்ட் மூஸ்ஸே மருத்துவமனைக்கு, 88 வயது முதியவர் தனது அந்தரங்க பகுதியில் வெடிகுண்டு சிக்கிக்கொண்டிருப்பதாக கடந்த சனிக்கிழமை  (டிச. 17) அன்று வந்தார். வெடிகுண்டு இருப்பதை அறிந்ததால் அதிர்ச்சி அதிர்ச்சி அடைந்த பலரும், மருத்துவமனையை விட்டு வெளியேறினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில்,"கடந்த சனிக்கிழமை (டிச. 17) இரவு 9 மணி முதல் 11.30 மணி வரை அவசரநிலை ஏற்பட்டது, இதற்கு வெடிகுண்டு அகற்றும் பணியாளர்களின் தலையீடு, பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான அவசரநிலைகளை வெளியேற்றுவது மற்றும் உள்வரும் அவசரநிலைகளைத் திசைதிருப்புதல் ஆகியவை தேவைப்பட்டன" என்றார். 


மேலும் படிக்க | ஆணுறுப்பை பெரிதாக்க நினைத்து... ஆபத்தில் முடிந்த காரியம் - வெல்டிங் கட்டரால் வெட்டி எடுப்பு


நோயாளியின் உடலில் சிக்கியுள்ள வெடிகுண்டு அகற்றுவதற்கு முன்னர், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கி, அந்த முதலாம் உலகப் போரைச் சேர்ந்த குண்டு, முதியவரின் உடலுக்குள் வெடிக்க வாய்ப்பில்லை என்று தீர்மானித்தனர்.



இதன்பின், ஆசுவாசம் அடைந்த மருத்துவர்கள், நோயாளியின் பின்புறத்தில் இருந்து 20 செ.மீ., நீளம் மற்றும் 2 அங்குல அகலமும் உள்ள அந்த வெடிகுண்டை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த முதியவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பாலியல் சுகத்திற்காக அந்த முதியவர் தனது பின்புறத்தில், வெடிகுண்டை செலுத்தியது தெரியவந்தது. 


இது அரிதாக இருந்தாலும், நோயாளியின் மலக்குடலில் இருந்து இதுபோன்ற பொருட்களை மருத்துவர்கள் அகற்றுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, இங்கிலாந்தின் க்ளூசெஸ்டர் பகுதியில் உள்ள ஒருவர் இரண்டாம் உலகப் போரின் (WWII) பீரங்கி குண்டு ஒன்று தடுக்கி விழுந்து அவரது மலக்குடலில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ‘சிக்கன் டிக்கா மசாலா’-வை கண்டுபிடித்த அலி அகமது அஸ்லாம் காலமானார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ