‘சிக்கன் டிக்கா மசாலா’-வை கண்டுபிடித்த அலி அகமது அஸ்லாம் காலமானார்

'சிக்கன் டிக்கா மசாலா'வை கண்டுபிடித்த பெருமைக்குரிய, கிளாஸ்கோவைச் சேர்ந்த சமையல்கலை வல்லுனரான அலி அகமது அஸ்லாம்,  தனது 77வது வயதில் காலமானார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 22, 2022, 04:35 PM IST
  • 'சிக்கன் டிக்கா மசாலா'வை கண்டுபிடித்த அலி அகமது அஸ்லாம் காலமானார்.
  • அவருக்கு வயது 77.
  • சிக்கன் டிக்கா மசாலா பிரிட்டிஷ் உணவகங்களில் மிகவும் பிரபலமான உணவாக உள்ளது.
‘சிக்கன் டிக்கா மசாலா’-வை கண்டுபிடித்த அலி அகமது அஸ்லாம் காலமானார் title=

'சிக்கன் டிக்கா மசாலா'வை கண்டுபிடித்த பெருமைக்குரிய, கிளாஸ்கோவைச் சேர்ந்த சமையல்கலை வல்லுனரான அலி அகமது அஸ்லாம்,  தனது 77வது வயதில் காலமானார். அலி அகமது அஸ்லாமின் மரணம் குறித்து கிளாஸ்கோவில் உள்ள அவரது ஷீஷ் மஹால் உணவகம் அறிவித்தது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அந்த உணவகம் 48 மணி நேரம் மூடப்பட்டதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

அலி அகமது அஸ்லாம் 1970 களில் தனது உணவகமான ஷீஷ் மஹாலில் தக்காளி சூப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட சாஸை மேம்படுத்தி இந்த டிஷ்ஷை கண்டுபிடித்தார். அலி அஸ்லாம் திங்களன்று காலை இறந்ததாக அவரது மருமகன் ஆண்ட்லீப் அகமது AFP இடம் கூறினார்.

"அவர் தினமும் தனது உணவகத்தில்தான் மதிய உணவு சாப்பிடுவார். உணவகமே அவருக்கு வாழ்க்கையாக இருந்தது. அங்கு பணிபுரிந்த சமையல் வல்லுனர்கள் அவருக்காக ஆசையுடன் சமைப்பார்கள். இருப்பினும், அவர் அடிக்கடி சிக்கன் டிக்கா மசாலா சாப்பிட்டாரா என்பது எனக்குத் தெரியவில்லை." என்று அகமது கூறினார்.

அலி அஸ்லாம் அனைத்திலும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுபவர் என்றும் மிகவும் உறுதி மிக்கவர் என்றும் அனரை அறிந்தவர்கள் அவரைப் பற்றி கூறுகிறார்கள். 

மேலும் படிக்க | வாண்டடாக கொரோனாவை வாங்கிய பாடகி - அட பாவமே... இதுக்காகவா!

பாகிஸ்தானில் பிறந்த அஸ்லம், சிறுவயதில் தனது குடும்பத்துடன் இங்கிலாந்துக்கு வந்து கிளாஸ்கோவில் குடிபெயர்ந்தார். பின்னர் கடும் முயற்சிக்கு பிறகு அவர் இந்த உணவகத்தை அமைத்தார். அவருக்கு திருமணமாகி ஐந்து குழந்தைகள் உள்ளதாக தி கார்டியன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தி கார்டியன், அஸ்லாமின் ஒரு AFP செய்தி நிறுவனப் பேட்டியை மேற்கோள் காட்டியுள்ளது. அதில் அவர், "சிக்கன் டிக்கா மசாலா இந்த உணவகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. நாங்கள் முதலில் இங்கு சிக்கன் டிக்காவைத் தயாரித்தோம். ஒரு நாள் வாடிக்கையாளர் ஒருவர், 'நான் அதனுடன் கொஞ்சம் சாஸ் எடுத்துக் கொள்கிறேன், இது கொஞ்சம் டிரையாக உள்ளது’ என்று கூறினார். அதன் பின்னர் சிக்கனை கொஞ்சம் சாஸ் சேர்த்து சமைக்க நினைத்தோம். பின், சிக்கன் டிக்காவை தயிர், கிரீம் மற்றும் மசாலா அடங்கிய சாஸுடன் சமைத்தோம். இது எங்கள் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப தயாரிக்கப்படும் உணவானது. பொதுவாக, அவர்கள் சூடான கறியை எடுத்துக்கொள்வதில்லை - அதனால்தான் நாங்கள் அதை தயிர் மற்றும் கிரீம் கொண்டு சமைக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

இந்த கூற்றின் நம்பகத்தன்மையை நிரூபிப்பது கடினம் என்றாலும், கிரீம் மற்றும் தயிர் கொண்ட சிக்கன் டிக்கா மசாலா பெரும்பாலும் மேற்கத்திய சுவையை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. கிளாஸ்கோவின் முன்னாள் எம்.பி.யான முகமது சர்வார், ஒருமுறை ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் ஒரு பிரேரணையை சமர்ப்பித்து, இந்த உணவை கிளாஸ்வேஜியன் சுவையாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சிக்கன் டிக்கா மசாலா பிரிட்டிஷ் உணவகங்களில் மிகவும் பிரபலமான உணவாக மாறியது. இந்த உணவு எங்கிருந்து வந்தது என்பதை உறுதியாக நிரூபிப்பது கடினம் என்றாலும், இது பொதுவாக மேற்கத்திய ரசனைகளுக்கு ஏற்ற கறியாகவே கருதப்படுகிறது.

மேலும் படிக்க | விடுதலையாகும் உலகம் சுற்றிய சைக்கோ கொலையாளி... 20க்கும் மேலே கொலைகள் - யார் இந்த சோப்ராஜ்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News