பாரிஸ்: அபாயா எனப்படும் இஸ்லாமிய ஆடையை பள்ளிகளில் மாணவிகள் அணிவதற்கு பிரான்ஸ் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். அடக்கமான உடையாக கருதப்படும் இந்த ஆடைக்கு தற்போது பிரான்சில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 27) தகவல் தெரிவித்த பிரெஞ்சு கல்வி அமைச்சர், அரசு நடத்தும் பள்ளிகளில், முஸ்லீம் பெண்கள் அணியும் தளர்வான, முழு நீள அங்கியான அபாயாவை அணிவதை தடை செய்வதாக அறிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாணாக்கர்கள் பள்ளிக்கு திரும்பும் பருவத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது என்பதால், இனிமேல், யாரும் பள்ளிக்கு அபாயா அணிந்து வர முடியாது என்பது தெளிவாகியுள்ளது. கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் TF1 தொலைக்காட்சியில் பேசியபோது இந்தத் தகவலை தெரிவித்தார்.



"இனி பிரான்ஸ் நாட்டின் அரசுப் பள்ளிகளில் அபாயா அணிவது சாத்தியமில்லை" என்று கூறினார். செப்டம்பர் 4 முதல் நாடு முழுவதும் வகுப்புகளுக்குத் திரும்புவதற்கு முன்னதாக, பள்ளித் தலைவர்களுக்கு "தேசிய அளவில் தெளிவான விதிகளை" வழங்குவதாக அவர் கூறினார்.


இஸ்லாமிய பெண்களின் கடுமையான ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக ஏற்கனவே பல தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரெஞ்சு பள்ளிகளில் அபாயா அணிவது குறித்த பல மாத விவாதத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.


மேலும் படிக்க | லேடீஸ் டாய்லெட்டில் புர்காவுடன் புகுந்த ஆண்... 23 வயதான ஐடி ஊழியரின் வினோத செயல்!


இஸ்லாமிய பெண்களின் ஆடைக் கட்டுப்பாடுகள் வெகு காலமாக தொடர்கின்றன. ஆனால், 19 ஆம் நூற்றாண்டு சட்டங்கள் பொதுக் கல்வியிலிருந்து பாரம்பரிய கத்தோலிக்க செல்வாக்கை நீக்கியதிலிருந்து, பிரான்ஸ் அரசு பள்ளிகளில் மத அடையாளங்களுக்கு கடுமையான தடையை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும், முஸ்லிம் சிறுபான்மையினரைக் கையாள்வதற்கான வழிகாட்டுதல்களை புதுப்பிப்பதில் பல பிரச்சனைகள் இருந்த நிலையில் தற்போது ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  
 
"மதச்சார்பின்மை என்ற கொள்கையானது, ஒருவரை மதத் தளைகளில் இருந்து விடுவிப்பதற்கான சுதந்திரம் என்றால், அதில் ஆடைகளுக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. அபாயா என்பது மதத்தை சுட்டிக்காட்டும் ஆடையாக உள்ளது. பள்ளிகளில் உருவாக்கப்பட வேண்டிய மதச்சார்பற்ற உணர்வை நோக்கி செல்வதற்கான முக்கியமான முடிவு இது" என்று பிரான்ஸ் நாட்டு கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
"நீங்கள் ஒரு வகுப்பறைக்குள் நுழைகிறீர்கள், மாணவர்களைப் பார்த்து அவர்களின் மதத்தை நீங்கள் அடையாளம் காண முடியாது," என்று அவர் கூறினார்.


மார்ச் 2004 உருவான பிரான்ஸ் நாட்டின் சட்டத்தின்படி, பள்ளிகளில் "மாணவ, மாணவிகள் அப்பட்டமாக மதச் சார்பைக் காட்டும் அடையாளங்கள் அல்லது ஆடைகளை அணிவது" தடைசெய்யப்பட்டுள்ளது. பெரிய சிலுவைகள், யூத கிப்பாக்கள் மற்றும் இஸ்லாமிய தலைக்கவசங்கள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அபாயாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | புர்கா அணிந்து பொது வெளியில் சுற்றிய பிரபல நடிகை.


இந்தியா சர்வதேச அளவில் இஸ்லாமிய பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் பிரெஞ்சு கல்வி அமைச்சகம் ஏற்கனவே ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.


அதில், அபாயா என்பது தடை செய்யப்பட வேண்டிய ஆடைகளின் குழுவில் ஒன்று என்று தெரிவித்தது, "மத தொடர்பை வெளிப்படையாகக் காண்பிக்கும் வகையில் அணிந்தால்" அவை அணிவது தடைசெய்யப்படலாம். பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் பெண்கள் அணியும் பொதுவான ஆடையை அபாயா என்று அழைப்பார்கள்.


உடம்பின் முகம், கை தவிர உடலின் ஏனைய பாகங்கள் வெளியில் தெரியக்கூடாது என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். பெண்களின் கண், கை தவிர உடலின் பாகங்கள் அவ்ரா (awrah) என்று அறியப்படுகிறது.  இரத்த உறவு, திருமண உறவு அல்லாத ஆண்களிடமிருந்து உடலின் பகுதிகளை மறைக்க வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கையாகும்.  


மேலும் படிக்க | இலங்கையில் புர்கா, மதரஸாக்களுக்கு தடை விதிக்க நாடாளுமன்ற குழு பரிந்துரை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ