அமெரிக்காவின் சியாட்டில் நகரில் கிராவிட்டி பேமண்ட்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கிரடிட் கார்டு சேவை உள்ளிட்ட நிதி சேவைகளை செய்து வருகிறது.இந்நிறுவனத்தை லூகாஸ் மற்றும் Dan Price ஆகிய சகோதரர்கள் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கினர். Dan Price தற்போது இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிறுவனத்தில் சுமார் 200 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொடக்கம் முதலே ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கி வரும் Dan Price, தற்போது தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை ஆண்டுக்கு 80 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தியுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 63 லட்சம் ரூபாய் ஆகும்.


Dan Price இப்படி அறிவிப்பது முதல் முறையல்ல. 6 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ஆண்டுக்கு 70 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தினார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 55 லட்சம் ரூபாய் ஆகும். இதனை ஒட்டி, ஆண்டுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்களாக இருந்த  தனது ஊதியத்தை 70 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக குறைத்துக் கொண்டார். இதன்படி பார்த்தால், அவரது ஊதியமும், ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியமும் ஒன்று ஆகும். இதற்காக அவர் கடும் விமர்சனங்களையும் சந்தித்தார். சோசலிசம் வணிகத்தில் வேலைக்கு ஆகாது என்பதற்கு உதாரணமாக எம்.பி.ஏ. மாணவர்களுக்கு பாடமெடுக்க  கிராவிட்டி பேமண்ட்ஸ் நிறுவனம் உதவும் என பல்வேறு ஊடகங்கள் விமர்சித்தன.


மேலும் படிக்க | கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீயால் தவிக்கும் பிரான்ஸ்! 57200 ஹெக்டேர் காடுகள் சேதம்


ஆனால், நேர்மாறாக அவரது நிறுவனத்தின் வருவாய் 3 மடங்கு அதிகரித்தது. மேலும் 2015-ம் ஆண்டு கிராவிட்டி பேமண்ட்ஸ் நிறுவனத்தின் தக்கவைப்பு விகிதம் 91 சதவீதமாகவும், நுகர்வோர் தக்கவைப்பு விகிதம் 95 சதவீதமாகவும் உயர்ந்தது. உலகையே ஸ்தம்பிக்க வைத்த கொரோனாவால், கிராவிட்டி பேமண்ட்ஸ் நிறுவனமும் சிக்கலை சந்தித்தது. ஆனால், ஊழியர்கள் தாமாக முன்வந்து ஊதியக்குறைப்பை பெற்றுக் கொண்டனர். நிலைமை சீராகத் தொடங்கியதை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஊதியம் வழங்கப்பட்டது. 


இந்த சூழலில் தான் ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை ஆண்டுக்கு 63 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளார் Dan Price.  தற்போதைய பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக Dan Price கூறியுள்ளார். மேலும், வீட்டில் இருந்து பணிபுரிவது, ஊழியர்கள் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் பணிபுரிவது, மனைவியின் மகப்பேறை ஒட்டி கணவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு என பல்வேறு சலுகைகளையும் Dan Price வழங்கியுள்ளார்.


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள Dan Price, மற்ற நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் எனவும், தங்களது நிறுவனத்தில் ஒரு வேலைக்கு 300 விண்ணப்பங்களுக்கு மேல் வருவதாகவும், குறிப்பிட்டுள்ளார். மேலும், யாரும் வேலை செய்ய விரும்பாத நிறுவனம் நரகத்திற்கு ஒப்பானது எனவும், மனிதர்களிடம் முதலீடு செய்யுங்கள் எனவும் Dan Price கூறியுள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.



மேலும் படிக்க | அதிர்ச்சியில் ஊழியர்கள்! 200 பேரை பணி நீக்கம் செய்த Microsoft


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ