மிக ஆபத்தான 12 டன் சரக்குகளுடன் கிரீஸில் விழுந்து நொறுங்கிய உக்ரைன் சரக்கு விமானம்
Greece Plane Crash: கிரீஸ் நாட்டில் 12 டன் எடை கொண்ட ஆபத்தான பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு விமானம் விபத்துக்குள்ளாதால், புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.
கிரீஸ் சரக்கு விமானம் விபத்து: வடகிழக்கு கிரீஸில் உள்ள கவாலா நகருக்கு அருகே சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்தனர். கிரேக்க அரசின் ஒளிபரப்பு நிறுவனமான ஈஆர்டியின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானம் அன்டோனோவ் ஏ-12, (Antonov An-12) ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களை ஏற்றிக்கொண்டு பங்களாதேஷுக்குச் சென்று கொண்டிருந்தது. செர்பியாவில் இருந்து ஜோர்டானுக்கு பறந்து கொண்டிருந்த போது, கிரீஸில் உள்ள பேலியோச்சோரி கிராமத்திற்கு அருகே விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தரையிறங்கும் போது தீப்பிடித்த விமானம்
உள்ளூர் நேரப்படி சுமார் 22:45 (19.45 GMT) அளவில் தீ இறங்குவதை உள்ளூர்வாசிகள் பார்த்தாக கூறப்படுகிறது. உக்ரைன் நிறுவனத்தால் இயக்கப்படும் விமானத்தில் 12 டன் எடையுள்ள ஆபத்தான இருந்தன என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | வேற்றுகிரகவாசிகள் இருப்பை உறுதி செய்கிறதா ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
ஜோர்டானுக்கு பறந்த விமானம்
செர்பியாவின் நிஸ் விமான நிலையத்தில் இருந்து ஜோர்டானில் உள்ள அம்மானுக்கு சரக்கு விமானம் பறந்து கொண்டிருந்ததாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அருகிலுள்ள கவாலா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்குவதற்கு அனுமதி கோரியது. ஆனால் அனுமதி கிடைக்கவில்லை.
சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டாம் என முடிவு
இராணுவம், வெடிமருந்து நிபுணர்கள் மற்றும் கிரேக்க அணுசக்தி ஆணையத்தின் ஊழியர்கள் பாதுகாப்பானது என உறுதி அளிக்கும் வரை அந்த இடத்திற்குச் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. வடக்கு கிரீஸ் தீயணைப்பு படையின் லெப்டினன்ட் ஜெனரல் மரியோஸ் அப்போஸ்டோலிடிஸ் இது குறித்து கூறுகையில், இந்த நேரத்தில் காற்று அளவீடுகள் எதையும் காட்டவில்லை என்றாலும், அங்கு கடுமையான புகை மற்றும் வெப்பம், அல்லது வெள்ளை பொருள் சூழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே அது என்ன என்பதை கண்டறிந்து பின்னரே செயல்பட வேண்டும் என்றார்.
மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுரை
விபத்து நடந்த இடத்திற்கு அருகில் வசிப்பவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், விபத்து நடந்த இடத்திலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதால் முகமூடிகளை அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு தீயணைப்பு வீரர்கள் நச்சுப் புகையால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் படிக்க | 40 மில்லியனுக்கும் அதிகமான விண்மீன்களை வகைப்படுத்திய நாசா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ