ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடி, ரஷ்யா உக்ரைன் யுத்தம் உணவுபொருள் பஞ்சத்தோடு, வரலாறு காணாத கடுமையான வெயிலும் மக்களை வாட்டுகின்றது. சில நாட்களாக தொடர்ந்து உக்கிரம் அடையும் வெயில் சில தினங்களாக ஐரோப்பாவினை முடக்கி போட்டுள்ளது. சாலையில் மக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே உள்ளது. பல நிறுவனங்கள் விடுமுறை அறிவித்திருக்கின்றன.  பள்ளிகள் இயங்குவதில் கடும் கட்டுப்பாடு, வெயில்கால நோய்கள் தடுக்கும் வழிமுறைகளை  அறிவித்துள்ளன. வெப்ப அலை தாக்குதலை எதிர்கொள்ளும் ஐரோப்பாவில் , கடும் வெப்பம் காரணமாக இறப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.  குளிரை மட்டும் தாங்கும் வகையில் இருக்கும் அவர்கள் உடல்வாகும், உணவுமுறையும் வெப்பத்தை தாங்க முடியாமல் போவதற்கான காரணங்கள் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திங்களன்று, மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 38 முதல் 40 டிகிரியை எட்டியது.  இந்தியாவில் வெயில் காலங்களில், இந்த அளவிற்கும் அதிகமாக வெப்பம் பதிவாகும். ஆனால், ஐரோப்பாவில் இது வரலாறு காணாத அளவாகும். இங்கிலாந்தின் லண்டன் நகரில் 38 டிகிரி பதிவாகியுள்ளது.  மத்திய இங்கிலாந்தில் உள்ள கேனிங்ஸ்பை என்ற பகுதியில் வெப்பநிலை 40.3 டிகிரி செல்சியஸை எட்டியது. 


மேலும் படிக்க | நீலத்திலிருந்து சிவப்பாக மாறிய பூமி; நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி புகைப்படம்


பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவை இந்த வெப்ப அலைகளுக்கு முக்கிய காரணம் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் கருதுகின்றனர். ஐரோப்பாவில் மட்டுமல்ல, இந்த ஆண்டு ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் பிற கண்டங்களிலும் இதேபோன்ற வெப்ப அலை நிகழ்வுகள் காணப்படுகின்றன. 


பிரிட்டனைத் தவிர, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி மற்றும் போலந்து போன்ற பிற ஐரோப்பிய நாடுகளில் ஒரு நாளின் சராசரி வெப்பநிலை மற்றும் அதிகபட்ச வெப்பநிலை அதிகரித்து வருகிறது. வெப்ப அலை நிகழ்வுகள் உலகின் பிற நாடுகளிலும் நிகழ்கின்றன. ஆனால் அவற்றின் தீவிரம் மற்றும் நீடிக்கும் காலம் ஐரோப்பாவில் அதிகமாக உள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள். பல இடங்களில் தீ பரவி பாதிப்பை மேலும் அதிகரிக்கிறது. 


மேலும் படிக்க | அணுகுண்டு வெடிக்கும்; உலகம் இருளில் மூழ்கும்: நாஸ்ட்ராடாமஸின் பீதியூட்டும் கணிப்பு


கார்பன் டை ஆக்சைடு தொடர்ந்து வெளியேற்றப்படுவதால், புவி வெப்பமடைதலுக்கு பெரும் காரணியாக மாறியுள்ளது. 19 ஆம் நூற்றாண்டிலிருந்து பூமியின் சராசரி வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இது தவிர, ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையிலான கடல்களும் வெப்ப அலைக்கு ஒரு பெரிய காரணம். வளிமண்டலத்தின் சுழற்சி மற்றும் கடல்களின் நிலை ஆகியவை வெப்பநிலையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் காற்றை அவர்களை நோக்கி இழுக்கின்றன. ஐரோப்பாவைப் பொறுத்தவரை, காற்று வட ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி வீசுகிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து வரும் இந்த அனல் காற்றும் இந்த வெப்ப அலைகளுக்கு முக்கிய காரணமாகிறது. கடந்த நான்கு தசாப்தங்களாக ஐரோப்பாவில் பல வகையான கடல் காற்றுகள் (பொதுவாக சூடான காற்று) வெப்ப அலை வீசும் நிகழ்வுகளை அதிகரித்து வருகின்றன. இந்த சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் அவற்றின் தீவிரம் மற்றும் வெப்ப அளவு அதிகரித்து வருகிறது.


மற்றொரு காரணம், அடிக்கடி ஏற்படும் வெப்ப அலைகள் தொடர்ந்து தட்பவெப்ப நிலையை அதிகரிக்கின்றன. வெப்ப அலை ஏற்பட்டவுடன், மண்ணின் ஈரப்பதம் காய்ந்துவிடும். வெப்ப அலைக்கு பூமியின் இருந்து ஈரப்பதம் கிடைக்காத போது, ​​அதன் வெப்பநிலை குறையாமல், காற்றின் வெப்பம் அதிகமாகிறது. அத்தகைய சூழ்நிலையில், சூரிய ஒளி  நெருப்பாக வீசுகிறது. 


மேலும் படிக்க | பிரிட்டனின் ‘அத்திப்பட்டி’; மாயமான கிராமத்தை வெளிகொணர்ந்த வெப்பம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ