அணுகுண்டு வெடிக்கும்; உலகம் இருளில் மூழ்கும்: நாஸ்ட்ராடாமஸின் பீதியூட்டும் கணிப்பு

நோஸ்ட்ராடாமஸின் 85 சதவீத கணிப்புகள் உண்மையாகியுள்ள நிலையில், 2022-ம் ஆண்டு என்ன நடக்கும் என 500 ஆண்டுகளுக்கு முன்பே அவர் கணித்த விஷயம் பீதியை கிளப்புவதாக உள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 19, 2022, 03:37 PM IST
  • அமெரிக்க டாலரின் மதிப்பும் கடுமையாக வீழ்ச்சியடையும்.
  • சிறுகோள் பூமிக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.
  • பிரான்சில் பெரும் புயல் ஒன்று தாக்கும்.
அணுகுண்டு வெடிக்கும்; உலகம் இருளில் மூழ்கும்: நாஸ்ட்ராடாமஸின் பீதியூட்டும் கணிப்பு title=

2022ம் ஆண்டிற்கான நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகள்: உலகின் தலைசிறந்த தீர்க்கதரிசியாக கருதப்படும் நாஸ்ட்ராடாமஸ் ஹிட்லரின் ஆட்சி, இரண்டாம் உலகப் போர், 9/11 தாக்குதல்கள் மற்றும் பிரெஞ்சுப் புரட்சி உட்பட அவரது கணிப்புகளில் 85 சதவீதம் உண்மையாகிவிட்டது. நாஸ்ட்ராடாமஸ் 500 ஆண்டுகளுக்கு முன்பே 2022ம் ஆண்டில் நடக்கப் போகும் நிகழ்வுகள் குறித்து என்ன கணித்திருக்கிறார் என்பதை அறிந்தால் பலரும் அதிர்ச்சியடைவார்கள். ஜெர்மனியில் 1503, டிசம்பர் 14ம் தேதி பிறந்த நாஸ்ட்ராடாமஸ், 1566 ஜூலை 6ம் தேதி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாஸ்ட்ராடாமஸ் 2022ம் ஆண்டு அணு குண்டுகள் வெடிக்கும் என கணித்துள்ளார். இந்த ஆண்டில் அணுகுண்டு வெடிப்பின் காரணமாக பருவநிலை மாற்றம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி அணுகுண்டு வெடிப்பதால் பூமியின் நிலையும் மாறலாம் என கணித்துள்ளார்.

பணவீக்கம் பற்றியும் கணிக்கப்பட்டுள்ளது

நாஸ்ட்ராடாமஸ் 500 ஆண்டுகளுக்கு முன்பே 2022 ஆம் ஆண்டின் பணவீக்கத்தையும் கணித்திருந்தார். நோஸ்ட்ராடாமஸ் கணிப்பில், இந்த ஆண்டு பணவீக்கம் கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. இது தவிர அமெரிக்க டாலரின் மதிப்பும் கடுமையாக வீழ்ச்சியடையும் என கூறப்பட்டுள்ளது. இதனுடன், 2022ம் ஆண்டில், மக்கள் தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயினில் அதிக பணத்தை முதலீடு செய்வார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | சமையல் எண்ணெய் கொடுத்தால் பீர்... பண்டமாற்று முறைக்கு மாறிய ஜெர்மனி

சிறுகோள்களால் பலத்த சேதம்

நாஸ்ட்ராடாமஸின் கணிப்பில், 2022 ஆம் ஆண்டில், சிறுகோள் பூமிக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. ஒரு பெரிய பாறை கடலில் விழும் என்றும், அதன் காரணமாக கடுமையான அலைகள் எழுந்து பூமியை எல்லா பக்கங்களிலிருந்தும் சூழ்ந்து கொள்ளும் என்று நாஸ்ட்ராடாமஸ் கூறியுள்ளார். கடல் நீர் பூமிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பிரான்சில் புயல் பேரழிவை ஏற்படுத்தும் 

நோஸ்ட்ராடாமஸின் கணிப்பின்படி, இந்த ஆண்டு பிரான்சில் பெரும் புயல் ஒன்று தாக்கும் என்றும், மேலும் உலகின் பல பகுதிகளில் கடுமையான வெள்ளம் போன்ற நிலைமைகளைக் காணலாம். அதோடு, இதற்கு நேர்மாறாக சில இடங்களில் கடும் வறட்சியும் இருக்கும்.

உலகம் முழுவதும் 72 மணி நேர இருள் சூழும்

2022 ஆம் ஆண்டில், பெரும் அழிவுக்குப் பிறகு அமைதி ஏற்படும். ஆனால் இந்த அமைதிக்கு முன், உலகம் முழுவதும் 3 நாட்கள் அதாவது 72 மணி நேரம் இருளில் மூழ்கி விடும் என்று நோஸ்ட்ராடாமஸ் தனது கணிப்பில் கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு மனிதர்களை கட்டுப்படுத்தும்

நோஸ்ட்ராடாமஸின் கணிப்பின்படி, 2022 ஆம் ஆண்டில், செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தை கட்டுப்படுத்தும் என்றும் தனிப்பட்ட கணினியின் மூளை மனிதர்களைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறியுள்ளார். மேலும் ரோபோக்கள் மனித இனத்தின் மீது தாக்குதக் என்றும் கணித்துள்ளார்.

மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் முக்கிய ராணுவ கூட்டத்தின் போது மயங்கி விழுந்தாரா; வெளியான பகீர் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News