பூமியில் வெப்ப அலைகள்: பூமி தொடர்ந்து வெப்படைந்து வருகிறது என தொடர்ந்து விஞ்ஞானிகள் எச்சரித்த வண்ணம் உள்ளனர். பூமி கடுமையாக வெப்பமடந்து உள்ளது என்பதைக் காட்டும் படம் ஒன்ரை நாசா வெளியிட்டுள்ளது. ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் உள்ள பல நாடுகளுக்கு, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கடுமையான வெப்பம் நிலவும் . இங்கு தட்ப நிலை 40 டிகிரி செல்சியஸை எளிதாக தாண்டி விடும். பல ஆண்டுகளாக சாதனைகள் முறியடிக்கப்பட்டன. 13 ஜூலை 2022 அன்று எடுக்கப்பட்ட படம் கிழக்கு அரைக்கோளத்தின் பெரும்பாலான பகுதிகளில் மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை மிகவும் அதிகரித்துள்ளதை காட்டுகிறது.
கோடார்ட் எர்த் அப்சர்விங் சிஸ்டம் (ஜியோஸ்) உலகளாவிய மாதிரியின் பதிப்பில் காணப்படும் அவதானிப்புகளை இணைப்பதன் மூலம் உருவாக்கப்பட்டது, இது வளிமண்டலத்தில் உள்ள இயற்பியல் செயல்முறைகளைக் குறிக்க கணித சமன்பாடுகளைப் பயன்படுத்துகிறது.
நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தின் குளோபல் மாடலிங் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் தலைவர் ஸ்டீவன் பாவ்சன், ‘வெவ்வேறு இடங்களில் வளிமண்டல அலைகளின் தெளிவான வடிவங்கள் உள்ளன. இதில் சில பகுதிகள் வெப்பமாகவும் (சிவப்பு) குளிராகவும் (நீலம்) காணப்படும். ஆனால் அதிக வெப்பம் உள்ள பெரும்பாலான பகுதிகள் மனிதர்களால் பரப்பப்படும் மாசுபாட்டின் காரணமாக கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அதிகரித்து, இதன் காரணமாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து மக்களின் வாழ்க்கை அழிக்கப்படுகிறது’ என்றார்.
மேலும் படிக்க | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்
1976ம் ஆண்டின் வரைபடம்
போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பல பகுதிகள் கடுமையான வெப்பத்தை அனுபவிக்கும் அதே வேளையில் மேற்கு ஐரோப்பா வறட்சியில் தத்தளிக்கிறது. போர்ச்சுகலின் லீரியாவில், ஜூலை 13 அன்று வெப்பநிலை 45 °C ஐ எட்டியது, இதன் காரணமாக 3000 ஹெக்டேர் (7200 ஏக்கர்) பரப்பளவு எரிந்தது. நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. 14 பெரிய தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
2022ம் ஆண்டின் வரைபடம்
இத்தாலியில் வரலாறு காணாத வெப்பத்தின் காரணமாக, ஜூலை 3 ஆம் தேதி இத்தாலியில், டோலமைட்ஸில் உள்ள மர்மோலாடா பனிப்பாறையின் ஒரு பகுதி, உடைந்தது. பனி மற்றும் பாறை பனிச்சரிவில் 11 பேர் கொல்லப்பட்டனர் ஈரானில், ஜூன் மாத இறுதியில் தட்ப வெப்ப நிலை 52 டிகிரி செல்சியஸை எட்டியது. அதேசமயம் சீனாவில் கடும் வெப்பம் காரணமாக சாலைகள் உருகின, மேற்கூரை உடைந்தன. கடந்த 46 ஆண்டுகளில் பூமியின் தோற்றம் எவ்வாறு மோசமடைந்துள்ளது என்பதை நாசா இரண்டு வரைபடங்களை வெளியிட்டுள்ளது. 1976 முதல் 2022 வரை, பூமியின் வரைபடம் நீல நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாக மாறியது.
மேலும் படிக்க | இன்னும் 30 ஆண்டுகளில் மனிதர்கள் வேற்று கிரகவாசிகளாக ஆவார்கள்: விஞ்ஞானிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ