ஞாயிற்றுக்கிழமை பிரிட்டிஷ் தலைநகரில் இடியுடன் பெய்த கனமழையின் காரணமாக, லண்டன் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் முழுவதும் நீர் நிரம்பியுள்ளதால் ஆங்காங்கே சாலைகளில் பேருந்துகள் மற்றும் கார்கள் சிக்கியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவசர சேவைகள் "லண்டன் முழுவதும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வரும் வெள்ளத்தை" எதிர்த்துப் போராடி வருவதாக மேயர் சாதிக் கான் ட்வீட் செய்துள்ளார். அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நடந்து செல்வதையோ அல்லது வாகனம் ஓட்டுவதையோ தவிர்க்குமாறும் அவர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


தென்மேற்கு லண்டனில் (London) பாதிக்கும் மேல் நீரில் மூழ்கிய வாகனங்களின் வீடியோக்கள் பல இணையத்தில் வலம் வந்தன. தென்கிழக்கு இங்கிலாந்து முழுவதும் மேலும் இடியுடன் கூடிய பலமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 7 மணி வரை லண்டன் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அதிகன மழைக்கான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மின்னல் தாக்குவதற்கும் வெள்ளப்பெருக்கு (Flood) ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அதிகன மழைக்கான அபாயம் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சில பகுதிகளில் 10 சென்டிமீட்டர் (நான்கு அங்குலங்கள்) வரை மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஜூலை மாத சராசரியை விட இரு மடங்கு அதிகமாகும்.


ALSO READ: China: கனமழை, பெரு வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்கள், பதபதைக்கும் காட்சிகள்


தென்மேற்கு லண்டனில் உள்ள குயின்ஸ்டவுன் சாலை நிலையம் அருகே ஒரு சாலையை போலீசார் மழை காரணமாக மூடிவிட்டனர். அங்கு மூன்று டபுள் டெக்கர் லண்டன் பேருந்துகள் ரயில்வே பாலத்தின் கீழ் சிக்கியதாக ஏ.எஃப்.பி பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.


தனது பேருந்தில் நீர் புகுந்த பிறகு, பயணிகள் பேருந்தில் இருந்து இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று எரிக் என்ற பேருந்து ஓட்டுநர் ஒருவர் கூறினார்.


வடகிழக்கு லண்டனின் வால்டாம்ஸ்டோவில் உள்ள மற்ற வாகன ஓட்டிகள் மழை பெய்ததால் தங்கள் வாகனங்களை சாலைகளில் அப்படியே விட்டுவிட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.


சாலைகள், சுரங்கப்பாதைகள் மற்றும் ரவுண்டானாக்கள் நீரில் மூழ்கியுள்ளதாக எச்சரித்த காவல்துறை (Police), தற்போது நிர்வாகம் கிழக்கில் ஏராளமான வெள்ளப்பெருக்கை கையாண்டு வருவதாக தெரிவித்துள்ளது.


ALSO READ: Watch Scary Video: இமாச்சல பிரதேசத்தில் அதிகன மழை, கடுமையான வெள்ளம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR