புதுடில்லி: இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் திங்கள்கிழமை (ஜூலை 12, 2021) பெய்த கனமழையால் பெரு வெள்ளம் ஏற்பட்டது. சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. மெக்லியோட்கஞ்ச் அருகே பாக்சு கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பல உணவகங்களும் தங்கும் விடுதிகளும் சேதமடைந்தன. விடாது பெய்த மழையால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இருப்பினும், மனித உயிருக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
இரவு முழுவதும் இடைவிடாது பெய்த மழையின் (Heavy Rain) காரணமாக சம்பவம் தூண்டப்பட்டிருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மாநில தலைநகரிலிருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள தர்மசாலாவில் 119 மி.மீ மழைப்பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்த மழைக்காலத்தில் மிக அதிக அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்-ஸில் வந்த ஒரு அறிக்கையின்படி, காகல் பகுதியில் ஒரு இடத்தில் அமைந்துள்ள மூன்று வீடுகளும் ஐந்து கடைகளும் வெள்ளப்பெருக்கால் (Flood) சேதமடைந்தன. நீர்தேக்கங்களும் ஏரிகளும் ஆக்கிரமிக்கப்பட்டதுதான் இந்த சேதத்துக்கு ஒரு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ:தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
இந்த மேக வெடிப்பு, கனமழை மற்றும் பெள்ளப்பெருக்குக்குப் பிறகு பல்வேறு சமூக ஊடக தளங்களில் நெட்டிசன்கள் பல வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். இவை பார்ப்பதற்கு பயங்கரமாகவும் அச்சம் அளிக்கும் வகையிலும் உள்ளன. அத்தகைய ஒரு வீடியோவை இங்கே காணலாம்:
#WATCH Flash flood in Bhagsu Nag, Dharamshala due to heavy rainfall. #HimachalPradesh
(Video credit: SHO Mcleodganj Vipin Chaudhary) pic.twitter.com/SaFjg1MTl4— ANI (@ANI) July 12, 2021
#WATCH Around 10 shops damaged as Manjhi River rages following heavy rainfall in Himachal Pradesh's Dharamshala pic.twitter.com/m98H2O6Ank
— ANI (@ANI) July 12, 2021
கூடுதலாக, காங்க்ரா மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை முதல் மிக அதிக மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய (IMD) இயக்குனர் மன்மோகன் சிங் ஐ.ஏ.என்.எஸ்ஸிடம் தெரிவித்தார். மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
காங்க்ரா மாவட்டத்தில் பாலம்பூரில் 155 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது மாநிலத்தில் பதிவான மிக அதிக அளவு மழையாகும். டல்ஹெளசியில் 48 மி.மீ, மாநில தலைநகரில் 10 மி.மீ மற்றும் அழகிய சுற்றுலா தலமான மணாலியில் 55 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
புதன்கிழமை வரை மாநிலத்தில் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ALSO READ: உங்கள் வீட்டை மழைக்காலத்தில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவும் ஏசியன் பெயிண்ட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR