அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக தற்போதைய அதிபர் ஒபாமா பிலடெல்பியா பகுதியில் பிரசாரம் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது அவர் கூறியதவாது:- ஹிலாரி தான் உங்களின் அடுத்த அதிபர். அவரை விட அதிபர் பதவிக்கு தகுதியானவர் யாரும் இல்லை. டிரம்பிடம் எதிர்கால திட்டங்கள் ஏதும் இல்லை. அமெரிக்கா ஏற்கனவே சிறந்த நாடு. நீங்கள் விரும்பினால் ஜனநாயகத்தை இன்னும் சிறப்பாக இங்கு கொண்டு வரலாம்.டிரம்ப் இதுவரை எந்த பிரச்னைக்கும் தீர்வுக்கான வழிகளை மேற்கொள்ளவில்லை. அவர் வெறும் பயத்தை மட்டுமே தந்துள்ளார். அவர் நமது ராணுவத்தை பேரழிவு என்றும், அமெரிக்காவை பலவீனமான நாடு என்றுமே கூறி வருகிறார். அதிபர் போட்டியில் இருந்து ஹிலாரி விலக மாட்டார்.


ஒசாமா பின்லேடனை கொல்வதற்கான ஆலோசனை நடந்த போது ஹிலாரி என்னுடனேயே இருந்து நமது திட்டத்திற்கு ஆதரவாக பேசி ஒசாமாவை கொல்லும் திட்டத்தை வகுக்க உறுதுணையாக இருந்தார் என ஒபாமா தெரிவித்தார்.