சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஹாங்காங் தலைமையகத்திற்கு அடுத்த ஒரு முக்கிய சாலையை ஹாங்காங் எதிர்ப்பாளர்கள் முடக்கினர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்களது போராட்டதின் போது ஆர்பாட்டக்காரர்கள், காவல்துறையினரிடம் ஆபாசமாகக் கூச்சலிட்டதாகவும், கடைகளின் சுவர்களில் அரசாங்க விரோத கிராஃபிட்டியைக் குவித்து, ஹெலிகாப்டரில் ஒளிக்கதிர்களை ஒளிரச் செய்தனர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.


ஹாங்காங் நகரத்தில் ஒரு பேரணிக்காக ஆயிரக்கணக்கான மக்கள் சனிக்கிழமை கூடி, பாடல்கள், உரைகள் மற்றும் கோஷங்களை எழுப்பி காவல்துறையினரை துயரத்தில் ஆழ்த்தினர். இந்த பேரணி 2014-ஆம் ஆண்டு எதிர்ப்பு இயக்கத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக அனுசரிக்கப்பட்டது. இது சீன பிராந்தியத்தில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கும் அழைப்பு விடுத்தது.


சிவில் மனித உரிமைகள் முன்னணியால் தாமார் பூங்காவில் நடைபெற்ற பேரணிக்கு காவல்துறையினர் ஒப்புதல் அளித்தனர், என்றபோதிலும் பாதுகாப்பு இறுக்கமாக இருந்ததால் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் சட்டமன்ற சபைக் கட்டடத்தை அணுகுவதைத் தடுத்தது.


இதனிடையே எதிர்பாளர்களை கலைக்க காவல்துறையினர் தண்ணீர் பீச்சியடித்தனர். கண்ணீர் புகை வெடிகுண்டு பயன்படுத்தி கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். எனினும் பயன் இல்லை.


எதிர்ப்பாளர்களில் சிலர் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ஹாங்காங் தலைவர் கேரி லாம் ஆகியோரின் படங்களை தரையில் ஒட்டி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். லாம் அலுவலகத்தின் வாயிலில், "நரகம்" என்ற சீன வார்த்தையும் ஒட்டி எதிர்பாளர்கள் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.