Nelore Cow Breed: உலகம் முழுவதும் மாட்டிறைச்சி, பால் சார்ந்த உணவுகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக மாடு வளர்ப்பு கொடிக்கட்டி பறக்கிறது. பொருளாதார ரீதியாகவும் மாடு வளர்ப்பு அதிக பலன்களை மக்களுக்கு கொடுக்கிறது. நாடு மாடுகளை விட, மரபணு மாற்றப்பட்ட இன மாடுகளுக்கு அதிகம் கிராக்கி இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகள் மாடுகளின் முக்கியத்துவத்தை காலச்சார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வெளிப்படுத்துகின்றன. இந்தியா மாட்டுறைச்சி ஏற்றுமதியில் உலக சந்தையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இங்கே, பிரேசில் நாட்டில் மாட்டு இறைச்சிக்காக அதிகம் வளர்க்கப்படும் ஒரு மாடு அதிக தொகைக்கு ஏலம் போயுள்ளது. 


கடந்த ஜூன் மாதம், பிரேசில் நாட்டில் நடந்த ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளை நிற பிரமாண்ட பசு மாடு ஒன்று அதிக விலைக்கு விற்கப்பட்டது. நெல்லூர் இன மாடான அது, ரூ.35 கோடிக்கு விற்கப்பட்டு, உலகிலேயே அதிக விலை கொண்ட மாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. 


மேலும் படிக்க | ஹிஜாப் அணியாத நடிகைக்கு சிறை தண்டனை... திரைபட விழாவிற்கும் தடை விதித்த ஈரான்!


நெல்லூர் இன மாட்டின் சிறப்பு என்ன?


நெல்லூர் இன மாடு, வெண்ணிறத்தில் இருக்கும், மாட்டிறைச்சிக்கு உற்பத்தியில் பெயர் பெற்றது. இந்த இனம் பிரகாசமான வெள்ளை ரோமங்கள் மற்றும் தோள்களில் ஒரு கூம்பு போன்ற தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளது.


ஓக்லஹோமா ஸ்டேட் யுனிவர்சிட்டியின் கூற்றுப்படி, நெல்லூர் இன மாடு அதன் தளர்வான மற்றும் தொங்கிய தோலினால் அதிக வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்டது. கூடுதலாக, இந்த இனம் ஐரோப்பிய மாடுகளுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு வியர்வை சுரப்பிகளைக் கொண்டுள்ளது.


நெல்லூர் இன மாடுகளின் இந்திய இணைப்பு


நெல்லூர் இன மாடுகள் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் தோன்றின. அதன் திறமையான வளர்சிதை மாற்றத்துடன் குறைந்த தரம் வாய்ந்த ஊட்டத்தில் செழித்து வளரும் திறன் காரணமாக இது பிரேசிலில் மிகவும் பிரபலமாகிவிட்டது. அதே பசுவின் பாதி உரிமையானது ஏற்கனவே 2022ஆம் ஆண்டில் சுமார் 800,000 டாலர்களுக்கு (ரூ. 6 கோடி) விற்கப்பட்டது, அந்த நேரத்தில் அது சாதனை படைத்தது.


Viatina-19 FIV Mara Imoveis என்ற பெயரிடப்பட்ட 4 மற்றும் ஒன்றரை வயது நெலோர் இனத்தின் மூன்றில் ஒரு பங்கு உரிமையாளர் 6.99 மில்லியன் ரியல்களுக்கு விற்கப்பட்டார், அதாவது 1.44 மில்லியன் டாலர்கள் (11 கோடி ரூபாய்). பசுவின் மொத்த மதிப்பு 4.3 மில்லியன் டாலர்கள் (ரூ 35 கோடி) என தகவல்கள் கூறப்படுகின்றன.


மேலும் படிக்க | உலகில் எத்தனை கண்டங்கள்? ஏழா? பூமி ஒரே கண்டமாக மாறினால்? திகைக்க வைக்கும் அறிவியல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ