ஆஹா! காதலுக்கான சிறந்த செண்ட்... ஆண்களை மயங்க வைக்கும் அழகியின் வியர்வை

Sweat Perfume: ஒரு பெண் தனது வியர்வை துளிகளை வைத்து வாசனை திரவியம் ஒன்றை உருவாக்கி, அதனை மூலம் ஆண்களை கவரலாம் என விற்பனை செய்து வருகிறார். இதுகுறித்து முழு தகவல்களையும் இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 14, 2023, 11:01 PM IST
  • முன்னாள் மற்றும் தற்போதைய காதலின் அறிவுரையை தொடர்ந்து அந்த பெண் இதை செய்துள்ளார்.
  • மேலும், இதை வாங்கியவர்களும் ஆண்களை அந்த செண்ட் ஈர்ப்பதாக கூறுகின்றனர்.
ஆஹா! காதலுக்கான சிறந்த செண்ட்... ஆண்களை மயங்க வைக்கும் அழகியின் வியர்வை title=

Sweat Perfume: ஒரு பெண் தனது வியர்வைத் துளிகளை வாசனை திரவியமாக தயாரித்து ஆன்லைனில் விற்பனை செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது ஆண்களை ஈர்க்கிறது என்றும் மற்றவர்களை கவரும் வகையில் மணக்கிறது என்றும் அந்த பெண் கூறுகிறார்.

பிரேசிலின் சாவோ பாலோவைச் சேர்ந்த வனேசா மௌரா (29) என்ற பெண், ஆண்களை ஈர்க்க விரும்பும் எவருக்கும் இந்த வாசனை சரியானது என்று கூறுகிறார். இவர் அங்கு மிகுந்த செல்வாக்கான, மிகவும் பிரபலமான மாடல் ஆக உள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,"இயற்கையான வாசனையின் குறிப்புகளுடன் எனக்கென்று ஒரு வாசனை தேவைப்பட்டது. இது வாசனை திரவியம், எனது முன்னாள் மற்றும் எனது தற்போதைய காதலன் இருவரின் கூற்றுப்படி, கவர்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது" என்றார். 

மேலும் படிக்க | ஆவியுடன் திருமணம்... ஹனிமூன்..! மஜா பாடகியை திடீரென மிரட்டும் பேய் கணவர்! என்ன தான் நடக்குது?

அவர் 2021ஆம் ஆண்டில் மற்ற பெண்களுக்காக தனித்துவமான வாசனை திரவியத்தை உருவாக்கினார், இதனால் அவர்கள் கவனத்தை எழுப்பவும், ஆண்களை ஆர்வத்தை தூண்டவும் பயன்படுத்த முடியும் என்கிறார்.

"மாண்டரின் ஆரஞ்சு, பெர்கமோட் மற்றும் இளஞ்சிவப்பு மிளகு ஆகியவற்றின் பழ குறிப்புகள் தவிர, எனது வாசனை திரவியத்தில் ஒரு சிறப்பு, என் வியர்வை. இது ஆர்வமும் மர்மமும் கலந்த கலவையாகும். 'Fresh Goddess' என்று பெயரிடப்பட்ட வாசனை திரவியத்தின் ஒவ்வொரு பாட்டிலிலும் அவரின் 8 மில்லி வியர்வையைச் சேர்க்கிறார். இது "டேட்டிங்கிற்கு உகந்த வாசனை திரவியம்" எனவும் வனேசா கூறினார்.

மேலும், "எனது இயற்கையான வாசனை ஆண்களை கவர்ந்திழுக்கிறது, அதனால் நான் என் வியர்வையின் துளிகளை வாசனை திரவியத்தின் நறுமணத்திற்கு முக்கியமான ஒன்றாக பயன்படுத்தினேன். காதல் மற்றும் பாலியல் சார்ந்த இந்த வாசனை திரவத்திற்கான சூத்திரத்தில் எனது வியர்வை மிக முக்கியமான மூலப்பொருளாகும்.

என் சமூக வலைதள பாலோயர் ஒருவர், இந்த வாசனை திரவியத்தின் வாசனை சக்தி வாய்ந்தது, அது வாக்குறுதியளிப்பதை நிறைவேற்றுகிறது என்று கூறினார். என் வியர்வையின் துளிகள், இந்த வாசனை திரவியத்திற்கு சிற்றின்பத்தையும் பெண்மையையும் தருகின்றன என்றும் அந்த பாலோயர் சொன்னார்" என்றார். 

அந்த பெண் பாலோயரின் கழுத்தில் இருந்து எழுந்த அந்த வாசனையை அடுத்து ஒரு ஆண் அந்த பாலோயரோடு காதலில் விழுந்ததாக வனேசா கூறினார். மேலும், அவர்கள் டேட் செய்ய ஆரம்பித்து வெறும் இரண்டு நாள்களில் காதலில் விழுந்துவிட்டதாகவும் கூறினார். 

மேலும் படிக்க | விண்வெளியில் தம்பதிகள் உடலுறவு வைத்துக்கொள்ள இத்தனை கோடியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News