ஈரான் அதிகாரிகள், கடந்த சனிக்கிழமை (ஜூலை 22) திரைப்பட விழாவை தடை செய்தனர். திரைப்பட விழாவில் நடிகை ஹிஜாப் அணியாமல் இருப்பது போன்ற விளம்பர போஸ்டர் ஒட்டப்பட்டது தான் அதற்கு காரணம். "சட்டத்தை மீறிய ஒரு சுவரொட்டியில் ஹஜாப் இல்லாத பெண்ணின் படம் பயன்படுத்தப்பட்டதை அடுத்து, கலாச்சார அமைச்சர் தனிப்பட்ட முறையில் ISFA திரைப்பட விழாவின் 13 வது பதிப்பைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்தார்" என்று மாநில செய்தி நிறுவனமான IRNA இல் ஒரு அறிக்கை கூறுகிறது. ஈரானிய குறும்பட சங்கம் (ISFA) அதன் வரவிருக்கும் குறும்பட விழாவிற்காக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்த போஸ்டரில் 1982 ஆம் ஆண்டு வெளியான தி டெத் ஆஃப் யாஸ்டுகர்ட் திரைப்படத்தில் நடிகை சூசன் தஸ்லிமி காணப்படுகிறார். இந்த விழா செப்டம்பர் மாதம் நடைபெற இருந்தது.
இஸ்லாமியப் புரட்சியில் இருந்தே நடைமுறையில் உள்ள ஆடைக் கட்டுப்பாடு
1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் அனைத்து ஈரானியப் பெண்களுக்கும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், 22 வயதான மஹ்சா அமினியின் மரணத்திற்குப் பிறகு தொடங்கிய ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து பெண்கள் ஆடை தொடர்பான விதிகளை மீறியுள்ளனர். மெஹ்சா அமினி ஆடை விதிமுறைகளை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருந்த அவர், பின் கொல்லப்பட்டதை அடுத்து போராட்டம் வெடித்தது. முன்னதாக ஜூலை மாதம், அதிகரித்து வரும் பெண்களின் சட்டத்தை மீறுவதைப் பிடிக்க ரோந்துப்பணி மீண்டும் தொடங்கப்பட்டதாக காவல்துறை கூறியது.
நடிகை அஃப்சானே பெய்கனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை
முன்ந்தாக பிரபல ஈரானிய நடிகை அப்சனே பயேகனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. "அஃப்சானே பெய்கனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஐந்தாண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார், ஹிஜாப் அணியத் தவறியதற்காகவும், ஹிஜாப் சட்டத்தைப் பின்பற்றாததற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.தண்டனை விதிக்கப்பட்ட ஈரானிய நீதிமன்றம், 61 வயதான பேயேகனுக்கு "குடும்ப விரோத ஆளுமையின் மனநலக் கோளாறு சிகிச்சைக்காக" ஒரு மனநல மையத்திற்கு வாரந்தோறும் வருகை தரவும், சிகிச்சைக்குப் பிறகு சுகாதாரச் சான்றிதழைச் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது.
நாட்டை விட்டு வெளியேற தடை
நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அவர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதித்தது. ஒரு திரைப்பட விழாவில் ஹிஜாப் இல்லாமல் நடிகை தோன்றி பின்னர் அந்த படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. மஹ்சா அமினியின் மரணத்திற்குப் பிறகு தொடங்கிய போராட்டங்களுக்கு பிகுன் ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒருவருக்கு தூக்கு! ஈரானில் நடக்கும் கொடூரம்!
உலகையே திரும்பி பார்க்க வைத்த ஹிஜாப் போராட்டம்
சென்ற ஆண்டு, ஈரானில், ஹிஜாப் விதிகளை மீறியதற்காக கலாச்சார காவல் பிரிவினரால் காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயதான குர்திஷ் ஈரானியப் பெண் மஹ்சா அமினி காவலில் மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து வெடித்த போராட்டத்தில், நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஈரானின் மதகுரு ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்த தீவிரப்படுத்தும் நோக்கில் மூன்று நாள் பொருளாதார வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்றும், தெஹ்ரானின் ஆசாதி சதுக்கத்தில், பேரணி நடத்த வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர். இதே போன்ற வேலைநிறுத்த நடவடிக்கை மற்றும் பொதுமக்கள் போராட்டத்துக்கான அழைப்புகள் காரணமாக, கடந்த வாரங்களில் நாட்டில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், நடைபெறும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களில் இந்த போராட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் படிக்க | பொது வெளியில் நடனமாடிய ஈரானிய இளம் தம்பதியினருக்கு 10 ஆண்டுகள் சிறை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ