இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மாவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசால் வழங்கப்படும் இலவச மாவுக்காக கிலோமீட்டர்கள் தூரம் என்ற அளவில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். இந்த மையங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, பாகிஸ்தான் அரசின் இலவச மாவு வழங்கும் திட்டத்தில் 20 பில்லியன் ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த கூற்றை பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், PML-N அரசியல் கட்சியின் மூத்த தலைவருமான ஷாஹித் ககான் அப்பாசி கூறியுள்ளார். லாகூரில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய அப்பாசி, நாட்டின் நிர்வாக அமைப்பு செயல்பட முடியாத அளவுக்கு ஊழல் நிறைந்ததாகவும், காலாவதியானதாகவும் மாறிவிட்டது என்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜியோ டிவியில் வெளியான செய்தியின்படி, பாகிஸ்தான் தலைவர், "ஊழல் அதிகாரிகள் அடையாளம் காணப்படுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாங்கள் நேர்மையான அதிகாரிகளைத் தேடுகிறோம்" என்று கூறினார். பாகிஸ்தானில் ரமலான் மாதத்தில் ஏழைகளுக்கு இலவச மாவு விநியோகிக்க அரசுகள் ஒதுக்கிய 84 பில்லியன் ரூபாய் மானியத்தில் ஏழைகளுக்கு என்ன கிடைத்தது என்று அப்பாசி கேட்டார். அரசாங்கத்தின் இலவச மாவு திட்டத்தில் 20 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணம் திருடப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மத்திய அரசும், பஞ்சாப் தற்காலிக அரசும் அவரது குற்றசாட்டை நிராகரித்தன.


அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தது பாகிஸ்தான் அரசு. பஞ்சாப், கைபர் பக்துன்க்வா, சிந்து மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள லட்சக்கணக்கான ஏழைகளுக்கு ரம்ஜான் பண்டிகையின் போது முழு வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையுடன் இலவச மாவு வழங்கப்பட்டதாக பாகிஸ்தான் தகவல் அமைச்சர் மரியம் ஔரங்கசீப் தெரிவித்தார். பல்வேறு நகரங்களில் உள்ள மாவு விநியோக மையங்களுக்கு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நேரில் சென்று பார்வையிட்டார். இதுமட்டுமின்றி, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை வெற்றியடையச் செய்ய இலவச மாவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிர்வாக அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்களின் முயற்சிகளையும் மரியம் அவுரங்கசீப் பாராட்டினார்.


மேலும் படிக்க | பிணங்களை வன்புணர்வு செய்யும் நெக்ரொபிலியாக்கள்... கல்லறைக்கு பூட்டு போடும் அவலம்!


ஷாஹித் ககான் அப்பாஸி  மன்னிப்பு கேட்க வேண்டும்


மறுபுறம், பஞ்சாபின் தற்காலிக தகவல் அமைச்சர் அமீர் மிரும், "இலவச மாவு திட்டத்தில் ஒரு பைசா கூட ஊழல் இல்லை" என்று அப்பாசியின் குற்றச்சாட்டை நிராகரித்தார். இலவச மாவு திட்டம் பஞ்சாப் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான திட்டமாகும் என்றும், "பஞ்சாபின் தகுதியான 3 கோடி மக்கள் மானியத்தின் பலனைப் பெற்றுள்ளனர்" என்றும் அவர் கூறினார். அமீர் மிர், 'மாவு மானியத்தை கட்சியின் உள் அரசியலுடன் இணைப்பது நியாயமில்லை. ஷாஹித் ககான் அப்பாஸி மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ஆதாரம் கொடுக்க வேண்டும்.


மேலும் படிக்க | பெனின்சுலாவிலும் இனி தீபாவளிக்கு தேசிய விடுமுறை! அமெரிக்க மாகாணம் அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ