உலகுக்கு கொரோனாவைக் கொடுத்துவிட்டு, உள்ளூரில் குத்தாட்டமா? வைரசை வெளியே அனுப்பிவிட்டு விருந்து வைக்கிறார்களா? சீனா இன்னும் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள முடியும்?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில நாட்களுக்கு முன்பு வுஹானில் (Wuhan) உள்ள ஒரு water park-ல் நடந்த ஒரு பெரிய எலக்ட்ரானிக் இசை விருந்தில், நூற்றுக்கணக்கான சீனர்கள் முகக்கவசம் கூட அணியாமல் கலந்து கொண்டனர் என்பது தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் முதன்முதலில் 2019 இல் தோன்றிய நகரம் வுஹான் என்பது குறிப்பிடத்தக்கது.


தகவல்களின்படி, வுஹானில் உள்ள மாயா கடற்கரை நீர் பூங்கா, நீச்சலுடைகள் மற்றும் கண்ணாடிகள் அணிந்த மக்களால் முழுமையாக நிரம்பியிருந்தது. ஆனால் நீர் பூங்காவில் இருந்தவர்கள் யாரும் முகக்கவசம் அணியவில்லை, தனி மனித இடைவெளியையும் பின்பற்றவில்லை.



வுஹானில் உள்ள நீர் பூங்காவின் பார்ட்டியின் படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மக்கள் இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளும் போது காட்டியுள்ள மெத்தனம் மற்றும் கவனக்குறைவு குறித்து அனைவரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சீன (China) அரசாங்கம் விதித்த 76 நாள் லாக்டௌன் முடிவடைந்ததையடுத்து, ஜூன் மாதம் வுஹானில் அனைத்து இடங்களும் திறக்கப்பட்டன என்பது நினைவிருக்கலாம். அப்போது இந்த வாட்டர் பார்க்கும் திறக்கப்பட்டது.


ALSO READ: பகீர் தகவல்: மலேசியாவில் 10 மடங்கு வீரியமான கொரொனா வைரஸ் திரிபு D614G....!!


2019 ஆம் ஆண்டில் வுஹானில் COVID-19 இன் முதல் தொற்று பற்றி கண்டறியப்பட்டது. அங்கிருந்து இந்த வைரஸ் ஐரோப்பாவிற்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது.


இன்று வரை உலகம் இந்த வைரசின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இதற்குக் காரணமான சீனாவின் வுஹான் நகரமோ கேளிக்கைகளில் மூழ்கியுள்ளது. இதை வினோதம் என்று சொல்வதா, அல்லது, விதி என்று சொல்வதா?  


ALSO READ: கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்!!