நான் தான் அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் லேடி? சண்டைபோட்ட அதிபரின் மனைவிகள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் தன்னுடைய மூன்றாவது மனைவி மெலானியாவுடன் வெள்ளை மாளிகையில் வசித்துவருகிறார். அதிபர்களின் மனைவியை ஃபர்ஸ்ட் லேடி என்று அழைப்பது வழக்கத்தில் இருக்கும் ஒன்று.
ட்ரம்பின் முதல் மனைவி இவானா, ’ரைசிங் ட்ரம்ப்’ என்ற புத்தகம் எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் குறித்த அறிமுக நிகழ்ச்சி ஒன்றில், நான் தான் ட்ரம்ப்பின் முதல் மனைவி, எனவே நான் தான் அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் லேடி என்றும் கூறியிருந்தார். ஆனால் இவரது பேச்சு அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ட்ரம்பின் மூன்றாவது மனைவி மெலானியா அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபின் க்ரிஷ்ஷான் மூலம் இவானா பேச்சுக்கு பதிலடி தந்துள்ளார்.
அவரது செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:- வெள்ளை மாளிகையை மெலானியாவின் இல்லமாக மாற்றியிருக்கிறார். அவர் தான் அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் லேடி. ஃபர்ஸ்ட் லேடிகான அதிகாரத்தைப் பயன்படுத்தி மற்றவருக்கு உதவ நினைக்கிறார். மற்றவர்கள்(இவானா) போல புத்தகத்தை விற்க முயற்சி செய்யவில்லை என்று கூறியுள்ளார்.