Moon-Earth: நிலவுக்கு என்னடி என்மேல் கோபம்? பூமியை விலகிச் செல்கிறது நிலா?
Space Science: `தக்கவைப்பு யுத்தம்’ நடத்தி நிலாவைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்யுமா பூமி? சுவாரசியமான அறிவியல் மோதல்....
புதுடெல்லி: நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருந்தாலும், அதனைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவரில் இருந்து சிக்னலும் கிடைக்கவில்லை என்ற கவலைகள் அதிகரித்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலகமே ஆவலோடு காத்திருக்கும் பிரக்யான் ரோவர் நிலவை பற்றிய ஆராய்ச்சியை செய்யும் என்பதற்கு மத்தியில், நிலவு, பூமியை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துக் கொண்டிருக்கிறது என்ற செய்தியும் கவலையை அதிகரிக்கிறது.
நிலவுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பு என்பது வெறும் கற்பனையானது மட்டுமல்ல, பூமியின் இருத்தல் தொடர்பானதும் கூட என்பது நிலவு, பூமியில் இருந்து விலகுவதன் முக்கியத்துவத்தைக் குறிக்கும். பூமியை நீள்வட்டப் பாதையில் நிலவு சுற்றி வருவதால் இரண்டு கோள்களுக்கும் இடையிலான தொலைவு நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கும்.
இரு கிரகங்களுக்கும் இடையில் அதிகபட்ச தொலைவு 406,731 கி.மீ தூரம் என்றால், குறைந்தபட்சம் ம் 364,397 கி.மீ தூரம் என்றும் சராசரி தொலைவு 384,748 கி.மீ என்றும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது, பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும் நிலவின் வட்டப்பாதையானது, ஆண்டுக்கு 37.8 செ.மீ என்ற விகிதத்தில் பெரிதாகிக் கொண்டேயிருக்கிறது.
இப்படி, பூமியில் இருந்து விலகிச் செல்வதால், நிலவு சூரியனை நோக்கிச் செல்கிறதா என்ற கேள்வி எழுந்தால், அதுவும் இல்லை. நிலவின் இந்த விலகல் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இன்றிலிருந்து 100 வருடங்கள் கழித்து ஒரு நாளின் கால அளவு 2 மில்லி செகண்டுகள் அதிகமாகியிருக்கும் என்று வானியலாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | சாதனை படைக்க நிலவில் தரையிறங்கும் சந்திரயான் - 3... நாடு முழுவதிலும் பிரார்த்தனைகள்!
மிலன்கோவிச் சுழற்சி (Milankovitch cycles)
உண்மையில், பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தை நிர்ணயிப்பது எது? மிலன்கோவிச் சுழற்சிகளும் அவற்றின் அதிர்வெண்களும் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தையும் தீர்மானிக்கின்றன. 2.46 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியுடனான நிலவின் தொலைவு, இப்போது இருப்பதை விட 60,000 கிமீ அருகில் இருந்தது.
பூமியில் உள்ள கடலலைகளைப் போல், நிலவின் அலைகளும் பூமியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவை இரண்டும், சந்திரன் மற்றும் சூரியனின் ஈர்ப்பு சக்தியால் திசைமாறிக் கொண்டேயிருக்கும். இந்த இடமாறுதல்கள் தொடர்ச்சியாகவும் மிக மெல்லியதாகவும் அதிர்வலைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.
கடலில் அலைகள் தளும்புவது போலவே, பூமியிலும் சந்திரனின் அதிர்வலைகள் தளும்பிக் கொண்டிருக்கின்றன. அந்த அதிர்வலைகள்தான் பூமியின் சுழற்சி வேகத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறது. பூமி-நிலவின் அதிர்வலைகளில் ஏற்படும் உராய்வுதான் அதற்குக் காரணம்.
நிலவு கொஞ்சம் கொஞ்சமாகத் தூரமாகச் செல்லச் செல்ல அதற்கு இதுவரை கிடைத்த சமநிலையான அதிர்வுகளில் மாற்றங்கள் நிகழ்கிறது. அந்தச் சமயத்தில் பூமி நிலாவோடு 'தக்கவைப்பு யுத்தம்’ நடத்தி நிலாவைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்யும்.
இந்த தாக்கமானது, நிலவின் சுற்றுவட்டப் பாதையுடைய ஆரத்தை பெரிதாகிக் கொண்டிருக்கிறது. நிலவு ஆண்டுதோறும் 3.78 செ.மீ என்ற அளவில் பூமியைவிட்டு விலகிச் சென்றுகொண்டே இருக்கிறது. இந்த உண்மை சமீபத்தில்தான் உறுதி செய்யப்பட்டது. இது, நிலவின் சுற்றுவட்டப்பாதையைப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறதே தவிர அதன் சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலக்கவில்லை. விலகிக் கொண்டிருக்கும் நிலவின் தூரம் அதிகமாக ஆக பூமியில் நாளின் நேரமும் நீண்டுகொண்டே போகும். இது மனித வாழ்க்கையிலும், மனிதர்கள் வாழும் நமது பூமியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இஸ்ரோவிடம் இல்லை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ