Hunza: 150 வயசு இருக்கறதெல்லாம் பெரிய விஷயமா என்ன? அசால்டாய் சொல்லும் ஹன்சா சமூகத்தினர்!
Hunza Longevity Secrets: இன்றைய காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்கள் ஆரோக்கியமாக 150 வயது வரை வாழ்கிறார்கள் என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கிறதா?
நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டுமென்ற ஆசை அனைவருக்கும் இருந்தாலும், மாறிவிட்ட இன்றைய காலச்சூழலில், இளம் வயதிலேயே சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நோய்கள் வருவதும் அதிகரித்து, ஆயுளை குறைக்கின்றன.
ஒருவரின் மிகப் பெரிய சொத்து என்பது ஆரோக்கியம் தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். ஒருவர் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அல்லது சமூகத்தில் பெரிய இடத்தில் இருந்தாலும், இவை அனைத்துமே ஆரோக்கியமான நீண்ட ஆயுள் என்ற விஷயத்திற்கு முன் சிறியதாகிவிடுகின்றன. வாழ்க்கையை அனுபவிக்க ஒருவர் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார் என்பது முக்கியமானது.
இன்றைய காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்கள் ஆரோக்கியமாக 150 வயது வரை வாழ்கிறார்கள் என்ற செய்தி ஆச்சரியத்தையும் பல கேள்விகளையும் எழுப்புகிறது.
நீண்ட ஆயுள் ரகசியம்
பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் 150 ஆண்டுகள் வாழ்கிறார்கள், அவர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் என்னவென்று தெரிந்து கொள்ள பலரும் ஆவலுடன் இருக்கின்றனர்.
பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வசிக்கும் ஹன்சா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 100 முதல் 150 ஆண்டுகள் வரை வாழ்கின்றனர் (Hunza Longevity). இவர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முன், உலகின் பிற பகுதிகளில் வாழபவர்களின் ஆயுள் குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
மேலும் படிக்க | கிட்னி பிரச்சனை இருக்கா... இந்த உணவுகளுக்கு NO சொல்லுங்க!
ஹன்சா பள்ளத்தாக்கு மக்களின் வாழ்க்கை முறை
மோசமான வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தாலும், வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் பல கடுமையான நோய்களுக்கு ஆளாகிறார்கள். ஆனால், பாகிஸ்தானில் 120 முதல் 150 ஆண்டுகள் வரை வாழும் ஒரு சமூகம் உள்ளது. இந்த சமூகத்தினர் முதுமையிலும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பது பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது.
இந்தப் பள்ளத்தாக்கில் வசிப்பவர்கள் 70 வயது வரை இளமையாக இருப்பது ஒருபுறம் என்றால், பெண்கள் 65 வயதிலும் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் காரகோரம் மலைகளில் ஹன்சா பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் இடத்தில் ஹன்சா சமூகத்தினர் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் காரணமாக இங்குள்ள மக்கள் மற்ற இடங்களில் வசிப்பவர்களை விட நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.
ஹன்சா சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் (Hunza Longevity Secrets)
ஹன்சா பள்ளத்தாக்கு நீல மண்டலத்தில் வருகிறது. உலகின் பிற பகுதிகளில் வாழும் மக்களை விட மக்கள் நீண்ட காலம் வாழும் சில இடங்கள் உலகில் உள்ளன, அத்தகைய பகுதிகள் நீல மண்டலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, உலகின் பிற இடங்களில் இருப்பதைவிட மாறுபட்டது.
வாழ்க்கை முறை
நீல மண்டலத்தில் வசிக்கும் மக்களின் உணவு எளிமையானதாகவும், உடல் உழைப்பு அதிகமானதாகவும் இருக்கும். மக்கள்தொகை குறைவாக இருந்தாலும், அவர்கள் நீண்ட காலம் வாழ்பவர்களாகவும், உலகின் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான சமூகமாகவும் அறியப்படுவதற்கு அவர்களது வாழ்க்கைமுறையே காரணம்.
மேலும் படிக்க | நோய்களை குணமாக்கும் கொய்யா! இது பழம் இல்ல... கொய்யா இலையின் மருத்துவ குணம்!
ஹன்சா சமூகத்தின் உணவு
ஹன்சா சமூகத்தினர் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையின் காரணமாக ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ்கிறார்கள். இங்குள்ள மக்கள் அக்ரூட் பருப்புகள், பேரீச்சம்பழம் மற்றும் அதன் அக்ரூட் எண்ணெயை அதிக அளவில் உட்கொள்கின்றனர். இவர்களுடைய இந்த உணவு முறையே, தீவிர நோய்கள் ஏற்படாமல் பாதுகாப்பதாக நம்பப்படுகிறது.
அக்ரூட் மரங்களே பள்ளத்தாக்கில் உள்ள மிக முக்கியமான உள்ளூர் பயிர்களில் ஒன்றாக உள்ளது. இந்த அக்ரூட், புற்றுநோய் மற்றும் உடலில் ஏற்படும் அழற்சியின் பிற ஆதாரங்களை எதிர்த்துப் போராட உதவும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.
குடிநீர்
இங்குள்ள மக்கள் பனிப்பாறையில் இருந்து உருகிவரும் தண்ணீரைக் குடிக்கின்றனர். அதுமட்டுமல்ல, ஆண்டில் 2 முதல் 3 மாதங்கள் வரை உணவு உண்பதில்லை. இந்த உண்ணாவிரத காலத்தில், நீராகரம் மட்டுமே பருகுவார்கள்.
ஹன்ஸா சமூகத்தினரின் வாழ்க்கை முறை, அதிக தொலைவு நடப்பது, பழங்கள், பச்சை காய்கறிகள், உலர் பழங்கள், பால் மற்றும் முட்டைகளை உள்ளடக்கிய உணவு என இவர்களது வாழ்க்கை மற்றும் உணவு முறையே, 70 வயதிலும் இளமையுடன் இருப்பதற்கும், 150 வயது வரை வாழ்வதற்கும் மிகப்பெரிய காரணம்.
மேலும் படிக்க | இரத்தத்தை சுத்தமாக்க எனக்கு இந்த உணவெல்லாம் வேண்டும்! அடம் பிடிக்கும் சிறுநீரகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ