நியூடெல்லி: சர்வதேச நாணய நிதியம் உலகளாவிய வளர்ச்சி கணிப்பை 2.8% ஆகக் குறைத்தது, ஆனால், சீனாவிற்கான வளர்ச்சி தொடர்பாக முன்னர் வெளியிட்ட 5.2% வளர்ச்சி என்ற கணிப்பு தொடர்வதாக ஐ.எம்.எஃப் கூறுகிறது. சில நாட்களுக்கு முன்னதாக, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்  உலகப் பொருளாதாரம் இந்த ஆண்டு 3 சதவீதத்திற்கும் குறைவாகவே வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகப் பொருளாதார வளர்ச்சி, கடந்த ஆண்டு 3.4 சதவீதத்தைவிட குறைவாக இருந்தது. இதனால், உலகளவில் பசி மற்றும் வறுமையின் அபாயம் அதிகரித்துள்ளது.


அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகப் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்திருந்தார்.



இது "1990 க்குப் பிறகு எங்களின் மிகக் குறைந்த நடுத்தர கால வளர்ச்சி முன்னறிவிப்பு மற்றும் கடந்த இரண்டு தசாப்தங்களில் சராசரியாக 3.8 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது" என்று கூறினார்.


பொருளாதாரத்தின் மந்தமான வளர்ச்சியானது உலகத்திற்கு "கடுமையான அடியாக" இருக்கும் என்று அவர் கூறினார், இது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்குப் மேலும் கடினமானதாக இருக்கும். 


2024 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் மூன்று சதவிகிதம் வளரும் என்று IMF கணித்துள்ளது, இது ஜனவரியில் அதன் முந்தைய கணிப்புகளிலிருந்து 0.1 சதவிகிதம் சரிவு இது.


மேலும் படிக்க | பெண்கள் ஹோட்டலுக்கு செல்லக் கூடாது... தொடரும் தாலிபான் அட்டூழியங்கள்!


சர்வதேச நாணய நிதியம் (IMF) செவ்வாயன்று உலகப் பொருளாதாரத்திற்கான அதன் கண்ணோட்டத்தை சிறிது குறைத்தது, உலகப் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.8 சதவிகிதம் வளரும் என்று கூறியது. பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் கவலைகள் இருந்தபோதிலும் பெரும்பாலான நாடுகள் இந்த ஆண்டு மந்தநிலையைத் தவிர்க்கும் என்றும் அது கணித்துள்ளது. 


"உலகப் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட அதிர்ச்சிகளிலிருந்து மீண்டு வருகிறது, குறிப்பாக தொற்றுநோயைக் கூறலாம். அதேபோல, உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு" உட்பட பல காரணங்கள் இருப்பதாக IMF இன் தலைமை பொருளாதார நிபுணர் பியர்-ஆலிவர் கௌரிஞ்சாஸ்செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.



அமெரிக்கப் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டில் 1.6 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது IMF இன் முந்தைய முன்னறிவிப்பில் 0.2 சதவிகிதம் அதிகமாகும். அமெரிக்க வளர்ச்சி அடுத்த ஆண்டு 1.1 சதவீதமாக குறையும்.


சீனாவைப் பொறுத்தவரை, IMF அதன் வளர்ச்சி முன்னறிவிப்பை இந்த ஆண்டிற்கான 5.2 சதவீதமாகப் பராமரித்தது, நாடு மீண்டும் திறக்கப்படுவது உலகின் பிற பகுதிகளிலும் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.


மேலும் படிக்க | இசையை ஒலிபரப்பியதற்காக பெண்கள் நடத்தும் வானொலி நிலையத்தை மூடிய தாலிபான்!


"(சீனாவின்) பொருளாதாரத்தின் மீள் திறப்பு மற்றும் வளர்ச்சியானது நேர்மறையான மாற்றங்களை உருவாக்கும், வலுவான வர்த்தக இணைப்புகள் மற்றும் சீன சுற்றுலாவை நம்பியிருக்கும் நாடுகளுக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருக்கும்" என்று சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை கூறுகிறது.  


இந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்பை ஐ.எம்.எஃப் சற்று உயர்த்தியது, ஆனால் ஜெர்மனியில் மந்தநிலை தொடர்வதாக ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், ஜேர்மனியின் பொருளாதாரம் 0.1 சதவிகிதம் சுருங்கும், இது ஜனவரியில் கணித்த சிறிய வளர்ச்சியில் இருந்து தலைகீழாக மாறும்.


ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, உலகளாவிய வளர்ச்சி கணிப்பு குறுகிய மற்றும் நடுத்தர அடிப்படையில் குறையும்.


90 சதவீத முன்னேறிய பொருளாதாரங்கள் இந்த ஆண்டு மந்தமான வளர்ச்சியை சந்திக்கும். இருப்பினும், ஆசியாவின் வளர்ந்து வரும் சந்தைகள் பொருளாதார உற்பத்தியில் கணிசமான உயர்வைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவும் சீனாவும் அனைத்துத்துறைகளிலும் பாதியளவில் வளர்ச்சி அடையும் என்று IMF நிர்வாக இயக்குனர்கடந்த வாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க | 'One Touch' கோல்டன் விசா சேவையை அறிமுகம் செய்தது ஐக்கிய அரபு அமீரகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ