பெண்கள் ஹோட்டலுக்கு செல்லக் கூடாது... தொடரும் தாலிபான் அட்டூழியங்கள்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி வந்தது. அன்று முதல் பெண்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் நரகமாகி வருகிறது. முன்பு பெண்களின் கல்வி கற்கவும், வேலைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 11, 2023, 02:56 PM IST
  • இஸ்லாமிய மக்கள்தொகையை தடுக்க கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தப்படுவதாக தலிபான்கள் நம்புகின்றனர்.
  • பெண்கள் பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
  • ஊடகங்களில் பெண்கள் பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெண்கள்  ஹோட்டலுக்கு செல்லக் கூடாது... தொடரும் தாலிபான் அட்டூழியங்கள்! title=

2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி வந்தது. அன்று முதல் பெண்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் நரகமாகி வருகிறது. முன்பு பெண்களின் கல்வி கற்கவும், வேலைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இப்போது ஆப்கானிஸ்தானில் பெண்கள் புல்வெளிகள் உள்ள அல்லது திறந்த வெளியில் உட்காரும் உணவகங்களுக்கு செல்லக்கூடாது என்று தலிபான்கள் புதிய ஆணையை பிறப்பித்துள்ளனர். இது போன்ற இடங்களில் பெண்களும் ஆண்களும் ஒன்றாக இருப்பதாகவும், இந்த இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவதில்லை என்றும் புகார்களில் கூறப்பட்டுள்ளதாக தாலிபான்கள் கூறுகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி திறந்தவெளி புல்வெளிகள் கொண்ட உணவகங்களில் பெண்கள் தனியாக மட்டுமல்ல, குடும்பத்துடன் கூட செல்ல முடியாது. இதுபோன்ற இடங்களில் பெண்களுக்கு ஹிஜாப் அணிவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை என்று தலிபான்களுக்கு புகார் வந்தது. தொடர்ந்து பல வகையில் பெண்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டு வந்த  நிலையில் இஸ்லாமிய மத குருக்களின் ஆலோசனைக்கு பின் ஹெராட்டில் இப்போது திறந்த வெளி ஹோட்டல்களுக்கு செல்ல தடை அமுல்படுத்தப்படுகிறது.

பெண் கல்விக்கு தடை

தலிபான் ஆட்சியில் பெண்களின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உயர்கல்வி நிறுவனங்களில் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் பெண்கள் அமர அனுமதிக்கப்படவில்லை. முன்னதாக, பெண்கள் பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும், ஊடகங்களில் பெண்கள் பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இசையை ஒலிபரப்பியதற்காக பெண்கள் நடத்தும் வானொலி நிலையத்தை மூடிய தாலிபான்!

கருத்தடை மாத்திரைகளுக்கு தடை

முன்னதாக இஸ்லாமிய மக்கள்தொகையை தடுக்க கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தப்படுவதாக தலிபான்கள் நம்புகின்றனர். அதனால்தான் தலிபான்கள் இதைப் பயன்படுத்த வேண்டாம் என்று வீடு வீடாகச் சென்று மக்களைக் கேட்டுக் கொண்டனர். மேலும், கடைக்காரர்கள் கருத்தடை மாத்திரைகளையும் பொருட்களையும் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தாலிபான் அமைச்சரவை கூட்டத்தில் சண்டை! அமைச்சரின் கையை உடைத்த தேர்வு வாரிய தலைவர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News