கிழக்கு, தென் சீனக் கடலில் சீன திட்டங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள ஜப்பான்
கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோயைப் பற்றி, கூறிய ஜப்பான பிரதமர் சுகா செப்டம்பர் மாதம் தான் பதவியை ஏற்றுக்கொண்டதிலிருந்து மக்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதில் ஒரு உறுதியான தீர்மானத்தை கொண்டிருந்ததாக கூறினார்.
ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா (Yoshihide Suga)சனிக்கிழமையன்று ஜி 7 மாநாட்டில், உரையாற்றுகையில், கிழக்கு மற்றும் தென் சீன கடல் பகுதிகளில் சீன ஒருதலைப்பட்சமாக மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து கவலை தெரிவித்ததாக என்.எச்.கே வேர்ல்ட் ( NHK World) என்னும் ஜப்பான் (Japan) ஊடகம் தெரிவித்துள்ளது. ஜப்பான் நேரம் இரவு 11 மணிக்குப் பிறகு ஜி 7 நாடுகளின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். சுகா, ஜோ பைடன் (Joe Biden) மற்றும் மரியோ டிராகி ஆகியோர் பங்கேற்ற முதல் ஜி 7 மாநாடு இதுவாகும்.
கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோயைப் பற்றி, கூறிய ஜப்பான பிரதமர் சுகா செப்டம்பர் மாதம் தான் பதவியை ஏற்றுக்கொண்டதிலிருந்து மக்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதில் ஒரு உறுதியான தீர்மானத்தை கொண்டிருந்ததாக கூறினார். கடந்த ஆண்டு நிறைய கற்றுக்கொண்டதாகவும், சிறந்த நடவடிக்கைகள் என்று அவர் நம்பியதை தனது அரசாங்கம் செயல்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
நோய்த்தொற்று கட்டுக்குள் இருப்பதற்கு தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், வளரும் நாடுகளுக்கு அவை நியாயமான வகையில் கிடைக்க வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் சுகா கூறினார்.
தடுப்பூசிகளின் விநியோகத்தை விரைவுபடுத்தவும், சுகாதார வசதிகளை பெறுவதில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கவும், ஜி 7 உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். தடுப்பூசிகளை வாங்குவதற்கான உலகளாவிய கட்டமைப்பிற்கு ஜப்பானின் பங்களிப்பை 200 மில்லியன் டாலர்களாக உயர்த்துவதாகவும் அவர் உறுதியளித்தார் என ஜப்பானிய ஊடகமான என்.எச்.கே வேர்ல்ட் தெரிவித்துள்ளது.
இந்த கோடையில் டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான தனது உறுதிப்பாட்டையும் சுகா வெளிப்படுத்தினார். பாதுகாப்பான வகையில் விளையாட்டை நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றார். இதில் மற்ற நாடுகளும் ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கோரினார். டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் ஆகியவை கொரோனா வைரஸை மனிதகுலம் வென்றுள்ளது என்பதற்கு சான்றாக அமைய உதவும் என்று ஜப்பான் பிரதமர் சுகா கூறினார்.
ALSO READ | இந்தியா சீனா இடையிலான கல்வான் மோதல் குறித்த வீடியோவை வெளியிட்ட சீனதரப்பு!!