இந்தியா சீனா இடையிலான கல்வான் மோதல் குறித்த வீடியோவை வெளியிட்ட சீனதரப்பு!!

கடந்த ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியப் படையினருக்கு எதிரான சீன படையினரின் மோதல் தொடர்பான வீடியோவை சீனதரப்பு வெளியிட்டுள்ளது!!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 20, 2021, 07:18 AM IST
இந்தியா சீனா இடையிலான கல்வான் மோதல் குறித்த வீடியோவை வெளியிட்ட சீனதரப்பு!! title=

கடந்த ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியப் படையினருக்கு எதிரான சீன படையினரின் மோதல் தொடர்பான வீடியோவை சீனதரப்பு வெளியிட்டுள்ளது!!

இந்திய துருப்புக்களுடன் கடுமையான கைகோர்த்து சண்டையின்போது குறைந்தது 5 இராணுவ அதிகாரிகளை இழந்ததை முதன்முறையாக ஒப்புக்கொண்ட பின்னர், சீன அரசு ஊடகங்கள் (Chinese state media) கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கு (Galwan Valley) மோதலின் வீடியோவை வெளியிட்டன.

ஜூன் மாதத்தில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையிலான மோதலைக் காட்டும் வீடியோவை சீன அரசு ஊடக ஆய்வாளர் ஷேன் ஷிவே (Shen Shiwei) பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், "இந்திய துருப்புகள்தான் சீன எல்லையில் அத்துமீறின" என சீனத் தரப்பால் குற்றம் சாட்டியுள்ளனர். 

கிழக்கு லடாக் பகுதியில் எல்லை பிரச்சினை காரணமாக இந்தியா-சீனா இடையே பதற்றம் நிலவி வந்த நிலையில், கடந்த ஆண்டு, ஜூன் மாதம் 15 ஆம் தேதி (Galwan Valley in June 2020) லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் (Central Military Commission of China - CMC) மோதலில் ஈடுபட்டனர். மோதல் நடந்த சில தினங்களில் சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ALSO READ | செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய NASA-வின் Persevarance அனுப்பிய படங்களால் உற்சாகத்தில் உலகம்

ஆனால், சீன தரப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் ரஷ்யா ஊடகமான டாஸ், கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் 45 சீன வீரர்கள் (soldiers) கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டது. ஆனால், சீன தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகாமல் இருந்தது. இதற்கிடையே, 2020 ஜூன் மாதம் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக சீனா முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

அதாவது, 2020 ஜூன் எல்லையில் நடந்த மோதலில் உயிர்த்தியாகம் செய்த 4 சீன ராணுவ வீரர்களுக்கு கவுரவ பட்டங்களும், முதல் தர தகுதி பாராட்டுகளும் வழங்கப்பட்டதாக மத்திய ராணுவ ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. ராணுவ வீரர்களை வழிநடத்திய மற்றும் பலத்த காயமடைந்த கர்னலுக்கு கவுரவ பட்டம் வழங்கப்பட்டதாக சீனாவின் அரசு ஊடகம்  செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், சீன அரசு ஊடகங்கள் கடந்த ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் வீடியோவை வெளியிட்டுள்ளன.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News