ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீபா மறைவு: இந்தியா ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீபாவின் மறைவையடுத்து இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீபாவின் மறைவையடுத்து இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிக்கிறது.
நேற்று (வெள்ளிக்கிழமை) காலமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று (2022, மே, 14 சனிக்கிழமை) ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates) அதிபரும் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் காலமானதாக அந்நாட்டின் அதிபர் விவகார அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த ஷேக் கலீஃபா வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 73. இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனர் அதிபர் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானின் மூத்த மகன் ஆவார்.
மேலும் படிக்க | இம்ரானின் முன்னாள் அமைச்சர்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய தடை
1948 இல் பிறந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மன்னரின் ஒன்றுவிட்ட சகோதரர் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல்-நஹ்யான் அபுதாபியின் அடுத்த ஆட்சியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
2008 நிதி நெருக்கடியின் போது ஐக்கிய அரபு எமிரேட்ஸை உலகளாவிய முக்கியத்துவத்திற்கு கொண்டு வர உதவியதற்காகவும், கொந்தளிப்பான காலங்களில் நாட்டை வழிநடத்தியதற்காகவும் ஐக்கிய அரபு அமிரகத்தின் அரசர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் பெருமளவில் பாராட்டப்படுகிறார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபரான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்காக ஐக்கிய அரபு அமீரகம், அரபு மற்றும் இஸ்லாமிய நாடு மற்றும் உலக மக்களுக்கு அதிபர் விவகார அமைச்சகம் இரங்கல் தெரிவிக்கிறது, என்று கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. .
“ஐக்கிய அரபு அமீரகம் இன்று முதல் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு நாற்பது நாள் அரசு துக்கத்தை அனுசரிக்கும் என்றும், அனைத்து அமைச்சகங்கள், துறைகள் மற்றும் கூட்டாட்சி, உள்ளூர் மற்றும் தனியார் நிறுவனங்களின் பணிகளை மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் அதிபர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. ” என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரபூர்வ டிவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இந்தியா-UAE தடையற்ற வாணிப ஒப்பந்தம் MSME துறைக்கு ஊக்கம் அளிக்கும்: பியூஷ் கோயல்
ஷேக் கலீஃபாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் என்றும், அதன் கீழ் இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறவுகள் செழித்தோங்கியதாகவும் கூறினார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “ஹெச்.ஹெச் ஷேக் கலீஃபா பின் சயீத் அவர்களின் மறைவு குறித்து அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராக இருந்தார், அதன் கீழ் இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறவுகள் செழித்திருக்கின்றன. மக்களின் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்களுடன் இந்தியா உள்ளது.அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என இரங்கல் தெரிவித்திருந்தார்.
மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வெளியிட்ட செய்திக்குறிப்பில், மே 14 ஆம் தேதி நாடு முழுவதும் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
துக்க நாளில், தேசியக் கொடி வழக்கமாக பறக்கவிடப்படும் அனைத்து கட்டிடங்களிலும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், உத்தியோகபூர்வ பொழுதுபோக்கு எதுவும் இருக்காது என்றும் தகவல் தெரிவிக்கிறது.
மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR