Sudan Violence: சூடானில் இருந்து இந்தியர்கள் உட்பட 11 நாட்டு மக்களை வெளியேற்றியது சவூதி அரேபியா
Saudi Arabia Evacuation From Sudan: சூடானில் வசிக்கும் இந்தியர்கள் உட்பட பன்னிரண்டு நட்பு நாடுகளைச் சேர்ந்த 66 குடிமக்களை ராயல் சவுதி கடற்படையினர் வெளியேற்றியதாக அமைச்சகம் ட்விட்டரில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: சூடானில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளின் குடிமக்களை சவுதி அரேபியா வெளியேற்றியுள்ளது. இது தொடர்பாக தகவல் வெளியிட்ட சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இந்தியர்களும் வெளியேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது.
வன்முறை மோதல்கள் வலுத்து வரும் சூடானில் இருந்து (Sudan Violence) பதினொரு நாடுகளின் குடிமக்களுடன் இந்திய நாட்டினரை வெளியேற்றியுள்ளதாக சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
சூடானில் வசிக்கும் இந்தியர்கள் உட்பட பன்னிரண்டு நட்பு நாடுகளைச் சேர்ந்த 66 குடிமக்களை ராயல் சவுதி கடற்படையினர் வெளியேற்றியதாக அமைச்சகம் ட்விட்டரில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், கனடா, துனிசியா, எகிப்து, பல்கேரியா, பிலிப்பைன்ஸ், குவைத் மற்றும் புர்கினா பாசோ ஆகிய நாடுகளை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சூடானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட மக்கள், தத்தமது நாடுகளுக்குச் செல்ல சவுதி வெளியுறவு அமைச்சகம் உதவுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | உணவும் இல்லை... குடிக்க தண்ணி கூட இல்லை... சூடானில் சிக்கி தவிக்கும் 31 கர்நாடக பழங்குடியினர்!
சூடானில் இந்தியர்கள் நிலை
முன்னதாக வெள்ளிக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி சூடானின் நிலைமையை மதிப்பிட்டார், தற்போது மோதலால் பாதிக்கப்பட்ட சூடான் நாட்டில், வசிக்கும் 3,000 க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களின் பாதுகாப்பில் அவர் கவனம் செலுத்தினார். இந்த விவகாரத்தில் அதிகாரிகள், உஷாராக இருக்கவும், சூடானின் வளர்ச்சிகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், அங்குள்ள இந்திய நாட்டினரின் பாதுகாப்பை மதிப்பீடு செய்யவும் உயர்நிலைக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
வேகமாக மாறிவரும் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் என்ன நடக்கலாம் என்பதற்கான முன்கணிப்புகளின் அடிப்படையில், அங்கு வசிக்கும் இந்தியர்களை தற்காலிகமாக வெளியேற்றுவது தொடர்பாக பிரதமர் அறிவுறுத்தினார். இந்த கலந்தாலோசனையின் போது, சூடானில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களை பிரதமர் மோடி மதிப்பிட்டு, கள நிலைமைகள் குறித்த முதல் அறிக்கையை பிரதமர் மோடி பெற்றார்.
சூடான் சண்டை
சூடானின் தலைநகர் கார்ட்டூமில் சண்டை அதிகரித்துள்ளதையடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இந்த சண்டையில் இதுவரை ஒரு இந்தியர் உட்பட 350 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | பாவங்களை போக்கி அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் தாய்லாந்து சோங்க்ரான் நீர் திருவிழா
சூடான் நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவ படைக்கும் இடையே அதிகாரத்தை கைப்பற்ற சண்டை மூண்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ராணுவமே தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு மக்களின் வாழ்க்கையை நரகமாக்கிவிட்டது.
இராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் மற்றும் துணை ராணுவத் தளபதி முகமது ஹம்தான் டாக்லோவுக்கும் இடையே நடந்து வரும் சண்டையில், அதெல் ஃபத்தாவுக்கு ஆதரவாக ராணுவமும், முகமது ஹம்தான் டாக்லோவுக்கு விசுவாசமான துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளும் (RSF) மோதலில் ஈடுபட்டுள்ளன.
2021 இல் சூடானின் இராணுவத் தலைவருக்கும் ஆளும் சபையில் உள்ள அவரது துணைத் தலைவருக்கும் இடையிலான சதிப்புரட்சியில் இருந்து மோதல் தொடங்கியது, 2019 இல் நீண்டகால சர்வாதிகாரி ஒமர் அல்-பஷீரின் வீழ்ச்சிக்குப் பிறகு, சூடான் ஜனநாயகத்திற்கு மாறுவதற்கான திட்டம் தடம் புரண்டது. 2023 இறுதிக்குள் நடைபெற்றது.
மேலும் படிக்க | சூடானில் ராணுவம் - துணை ராணுவம் இடையில் மூண்ட போர்! 25 பேர் பலி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ