Indian digital innovations: பில்கேட்ஸின் பாராட்டு மழை
மைக்ரோசாப்ட் துணை நிறுவனர் பில் கேட்ஸ் இந்திய டிஜிட்டல் கண்டுபிடிப்புகளைப் பாராட்டி பேசியிருக்கிறார். சீனாவைத் தவிர, டிஜிட்டல் துறையில் முன்னேற்றம் கண்டுள்ள ஒரு நாடு என்று இந்தியாவை அழைக்கிறார்.
மைக்ரோசாப்ட் துணை நிறுவனர் பில் கேட்ஸ் இந்திய டிஜிட்டல் கண்டுபிடிப்புகளைப் பாராட்டி பேசியிருக்கிறார். சீனாவைத் தவிர, டிஜிட்டல் துறையில் முன்னேற்றம் கண்டுள்ள ஒரு நாடு என்று இந்தியாவை அழைக்கிறார்.
அமெரிக்க வணிக அதிபரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில் கேட்ஸ் செவ்வாயன்று இந்தியா டிஜிட்டல் பேமெண்ட் (digital payment) கொள்கைகளை பாராட்டியதோடு, எந்தவொரு வங்கி அல்லது ஸ்மார்ட்போன் செயலிக்கும் இடையே பணத்தை அனுப்புவது உட்பட டிஜிட்டல் பண பரிமாற்றத்திற்கான ஒரு லட்சிய தளத்தை இந்தியா உருவாக்கியுள்ளது என்று பில்கேட்ஸ் பாராட்டினார்.
சிங்கப்பூர் ஃபிண்டெக் விழாவில் (Fintech Festival) பில் கேட்ஸ் (Bill Gates) பேசினார், அங்கு அவர் இந்தியாவின் நிதி பரிமாற்றக் கொள்கைகள் மற்றும் அடையாளங்களுக்கான "லட்சிய" தளங்களை பாராட்டினார். இது "பண விநியோகத்தின் செலவு மற்றும் தேக்கத்தை" குறைக்கும் என்று அவர் கூறினார்.
Also Read | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 20 இந்தியர்கள்
“சீனாவைத் தவிர, இப்போது ஒரு நாட்டை கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றால், அது இந்தியாவாகத்தான் இருக்கும் என்று நான் கூறுவேன். "அங்கு விஷயங்கள் துரிதமாக முன்னேறி வருகின்றன, அந்த அமைப்பைச் சுற்றியுள்ள நவீனத்துவம் தனித்துவமானது" என்று இந்தியா குறித்த தனது கருத்தை பில்கேட்ஸ் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
"இந்தியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மற்ற நாடுகளுக்கு சாத்தியமில்லாத பல தொழில்நுட்பங்களை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இன்று அணுகல் இல்லாதவர்களுக்காக உதவும் கேட்ஸ் அறக்கட்டளையின் (Gates Foundation) பங்கு தொழில்நுட்பங்கள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்வதாகும். மென்பொருள் மற்றும் டிஜிட்டல் அடையாள அமைப்புகள் உட்பட, நிதி நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல, சுகாதாரம், வாக்களிப்பது, கல்வி என பல கோணங்களில் கேட்ஸ் அறக்கட்டளை கவனம் செலுத்துகிறது” என்று கேட்ஸ் கூறினார்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலை குறைவான வயர்லெஸ் தரவுகள் கிடைப்பது ஆகியவற்றால் இந்தியாவின் டிஜிட்டல் கட்டண முறை ஊக்கம் பெற்றது. அதோடு, 2016 ஆம் ஆண்டில் மத்திய அரசு மேற்கொண்ட உயர் பணமதிப்புக் கொண்ட ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற்றதும் ஒரு முக்கியமான காரணமாகும்.
Also Read | Year Ender 2020: ஹாரி & மேகன் மேகன் மார்கெல் திருமணம் முதல் Megxit வரை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR