அமெரிக்காவிற்கு உளவு பார்த்த உளவாளியை தூக்கிலிட்டது ஈரான்..!!!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய உளவாளி ஒருவர் இன்று தூக்கிலிடப்பட்டார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிற்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய நாட்டைச் சேர்ந்த மஹ்மூத் மவுசவி-மஜ்த் திங்கள்கிழமை தூக்கிலிடப்பட்டதாக ஈரானின் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
புரட்சிகர காவல்படையின் முன்னாள் தளபதி காசிம் சுலைமானியை (Qassem Soleimani) உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர், இவர் 2018 இல் கைது செய்யப்பட்டார்.
நவம்பர் 2019 இல் நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று தலைமை தாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஈரானிய உள்ளூர்வாசிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மரணதண்டனைகள் செயல்படுத்த வேண்டாம் என்று "Don’t execute" என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்யப்பட்ட பின்னர் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
ஈரானுடன் தொடர்புடைய தீவிரவாதிகளுடன் இணைந்து அமெரிக்கப் படைகள் மீது நடத்திய தாக்குதல்களின் சூத்திரதாரி என்று குற்றம் சாட்டப்பட்ட புரட்சிப்படையின் தலைவர் சுலைமாணியை அமெரிக்கா, ட்ரோன் தாக்குதல் மூலம் 2020 ஜனவரி மாதம் கொன்றது குறிப்பிடத்தக்கது.
சுலைமானி இருக்கும் இடம் பற்றிய தகவல்களை மஹ்மூத் மவுசவி-மஜ்த் மீது குற்றம் சாட்டப்பட்டது.
எனினும், அந்த குற்றத்திற்காக அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படவில்லை என ஈரான் கூறியுள்ளது
கடந்த ஆண்டு ஈரானால் கைது செய்யப்பட்ட 17 CIA உளவாளிகளில் மஹ்மூத் ஒருவராக இருந்தாரா என்பது குறித்து ஈரான் அதிகாரிகள் தெளிவுபடுத்தவில்லை. இருப்பினும், மஹ்மூத் CIA , அதாவது அமெரிக்க உளவாளி என்று பத்திரிக்கையாஅளர் கூட்டம் ஒன்றில் கூறப்பட்டது.
ALSO READ | அடிக்கல் நாட்டியதோடு நின்றது பணி… பாக்.கில் இந்துக் கோயில் சாத்தியமா இனி?
சென்ற வாரம், ஈரானின் ராக்கெட், அணு ஆயுத தயாரிப்பு மற்றும் சுலைமானியின் இருப்பிடம் குறித்த தகவல்களை அமெரிக்காவின் உளவு அமைப்பான CIA -வுக்கு ரகசியமாக அளித்ததாக ரிசா அஸ்ஹரி என்பவரை ஈரான் தூக்கிலிட்டது.