பெண் பணியாளரின் பின்னாடி அறைந்த மேனேஜர்... இழப்பீடு இத்தனை லட்சமா?
அலுவலக கூட்டத்தின்போது, பெண்ணின் பின்னாடி அறைந்த மேலாளரின் செயலுக்கு அந்த நிறுவனம் பல லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது.
வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த பெண் பணியாளரை, அலுவலக கூட்டத்தின்போது எழுந்து திரும்பி நிற்கும்படி மேனேஜர் கூறியுள்ளார். அதன்படி, திரும்பி நின்ற பெண்ணின் பின்புறம் அந்த மேலாளரால் அனைவருக்கும் முன்னால் ஒரு ஸ்கேலால் அறைந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது மேலாளர், "மன்னிக்கவும், இதை செய்ய வேண்டியதாகிவிட்டது" எனக் கூறியுள்ளார். அதற்கு அந்தப் பெண் மற்றொரு ஆண் மேலாளரைப் பார்த்து, "அது அனுமதிக்கப்பட்ட ஒன்றா" எனக் கூறி கேள்வியெழுப்பியுள்ளார்.
இரு மேலாளர்களும் அதை நகைச்சுவையாகக் கருதினர். பின்னர் அவர்கள் கூட்டத்திற்கு வந்த மற்ற ஊழியர்களிடம் இதுகுறித்து பேசியுள்ளார்கள்.
இதையடுத்து, அந்த விஷயம் பெரும் பிரச்னையை கிளப்பியது. தொடர்ந்து ஊடகங்களிடம் அந்த பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், தான் மிகவும் அவமானமடைந்து சங்கடத்தில் இருந்ததாகவும், தனது காதலன் மற்றும் தாயிடம் கூட தான் சொல்லவில்லை என்றும் கூறினார்.
பின்னர் அவர் தாய் மற்றும் காதலரிடம் சில நாள்கள் கழித்து கூறியபோது, அவர்கள் அந்தச் சம்பவத்தை HR மற்றும் மூத்த நிர்வாகத்திடம் தெரிவிக்கும்படி தனனை ஊக்கப்படுத்தியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தீர்க்கப்படும் வரை வேலைக்குத் திரும்பப் போவதில்லை என்று அவர் அந்த நிறுவனத்தின் தலைமையிடம் கூறியுள்ளார்.
அந்த பெண்ணிடம் சமாதானம் பேச வந்த, அந்த மேலாளர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் யாரையும் அந்த பெண் சந்திக்க மறுத்துவிட்டார். மேலும், அந்த சம்பவத்தை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவே முடியாது என விடாப்பிடியாக இருந்துள்ளார்.
பின்னர், அந்த பெண்ணை அடித்த மேலாளர் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். 10 நாட்களாகியும் தனது குற்றச்சாட்டை அவர்கள் ஏற்கவில்லை என்று அந்த பெண் கூறினார். சம்பவம் தொடர்பான விசாரணை ஐந்து வாரங்கள் ஆனது.
விசாரணையில் தன்னைப் பற்றி பொய்யான மற்றும் இழிவான கருத்துக்கள் வெளியிடப்பட்டன என்று அந்த பெண் கூறினார். விசாரணைக்கு மேல்முறையீடு செய்து தனது வேலையையும் அந்த பெண் ராஜினாமா செய்தார். முறையற்ற வகையில் உடை அணிந்து வந்ததாக என்று அந்த பெண் மீது அந்த நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதன்பின் அந்த பெண் மேற்கொண்ட மேல்முறையீட்டில், விசாரணை ஆணையம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 90 ஆயிரம் ஈரோ (ரூ. 90 லட்சம்) இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும், மேலாளர் மற்றும் அந்த நிறுவனத்தின் செயல்களால், அந்த பெண் பெரும் அவமானத்தை அனுபவித்ததாக விசாரணை ஆணையம் உறுதிசெய்தது.
மேலும் படிக்க | கள்ள நோட்டுகளை அச்சடித்து ஆடம்பரமாய் வாழ்ந்த தந்தை -மகன்! அதிர்ச்சியில் போலீஸார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ