"விண்வெளி பயணம், விண்வெளி வாழ்க்கை, விண்வெளியில் எதிர்காலம்" என்ற அடிப்படையில் நீண்ட காலமாக பல்வேறு ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பல நாடுகள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. ஆனால் தற்போது விண்வெளியில் செக்ஸ் அல்லது உடல் உறவு கொள்ள முடியுமா என்ற கோணத்தில் ரகசியமாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இதுக்குறித்து முக்கியத் தகவல் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விண்வெளி பயணம் மேற்கொள்ளும் ஆர்வம்,  விண்வெளி வீரர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,  இதுவரை சுமார் 500 பேர் விண்வெளியில் காலடி எடுத்து வைத்துள்ளனர். உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கலாம்  இவ்வாறான நிலையில், எதிர்காலத்தில் மனிதர்கள் விண்வெளியில் நீண்ட காலம் இருக்க நேரிடும் வாய்ப்புகள் உள்ள நிலையில், விண்வெளியில் உடலுறவு சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


விண்வெளியில் செக்ஸ் சாத்தியமா?


'டெய்லி ஸ்டார்' அறிக்கையின்படி, பிரெஞ்சு அறிவியல் எழுத்தாளர் Pierre Kohler தனது 'The Final Mission: Mir, the Human Adventure' என்ற புத்தகத்தில் 1996 வாக்கில், ஒரு ஜோடி விண்வெளியில் உடலுறவு கொண்டதாகக் கூறியுள்ளார். விண்வெளியில் செக்ஸ்  அல்லது உடல் உறவு கொள்வது தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகள், எதிர்காலத்தில் திருமணமான தம்பதிகளை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அனுப்புவது தொடர்பானவை என குறிப்பிட்டுள்ளார்.


ALSO READ | Black Hole: பால்வீதியின் மிகப்பெரிய கருந்துளையில் கசிவு என NASA தகவல்!


நாசாவின் ரகசிய திட்டம்:


STS-XX என்ற குறியீட்டுப் பெயருடன் நாசா NASA இதற்கான ரகசியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்று கோஹ்லர் கூறினார். மைக்ரோ கிராவிட்டியில்  உடல் உறவு சாத்தியமா என்பதை இது ஆராய்கிறது. இதற்கு விஞ்ஞானிகள் கணினி மாதிரியையும் பயன்படுத்தியுள்ளனர். தம்பதிகள் ஸ்பேஸ் கேப்ஸ்யூலில், எந்த நிலையில்  உடலுறவு கொள்ளலாம் என்பதைக் கண்டறிய இது உதவியாக உள்ளது .


நாசாவின் கடுமையான விதிமுறைகள்:


இரண்டு பன்றிகளிடம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பிரெஞ்சு விஞ்ஞானி கூறினார். இருப்பினும், நாசா கோஹ்லரின் கூற்றுக்களை நிராகரித்து, அத்தகைய பரிசோதனை எதுவும் நடைபெறவில்லை என்று வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில், ரஷ்ய விண்வெளி ஏஜென்சியும் இந்த கூற்றுக்களை மறுத்துள்ளது. திருமணமான தம்பதிகள் ஒன்றாக விண்வெளிக்கு செல்வதற்கு எதிராக நாசா கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளது.


விண்வெளியில் உடலுறவு - விறைப்புத்தன்மைக்கு பிரச்சனை வரலாம்


பயோமெடிக்கல் ப்ராப்ளம்ஸ் இன்ஸ்டிட்யூட்டின் துணைத் தலைவர் வலேரி போகோமோலோவ் (Valery Bogomolov) இது குறித்து கூறுகையில்,  விண்வெளியில். புவீஇர்ப்பு விசை இல்லாத நிலையில், விண்வெளி வீரர்கள் நிச்சயமாக மனிதர்கள் என்றாலும், விண்வெளியில் உடலுறவு என்பது பற்றி எங்குமே பேசப்பட விலை என்றார். விண்வெளியில் உடலுறவு கொள்வதில் பல தடைகள் இருக்கும். உதாரணமாக, ஆண் விண்வெளி வீரர்கள் புவிஈர்ப்பு இல்லாததன் காரணத்தினால், விறைப்புத்தன்மைக்கு போராட வேண்டியிருக்கும் என்றார்.


ALSO READ | விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; விண்வெளி நடையை ஒத்தி வைத்தது NASA!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR