Israel Palestine Conflict: இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடந்து ஐந்தாவது நாளாக தொடர்கிறது. காசாவில் உள்ள 200 ஹமாஸ் நிலைகளை இஸ்ரேல் ஒரே இரவில் தாக்கி அழித்தது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில் இதுவரை 2,100 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் சுமார் 1,200 பேர் இஸ்ரேலியர்கள் மற்றும் சுமார் 900 பாலஸ்தீனியர்களும் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,900ஐ எட்டியுள்ளது. அதே நேரத்தில், காஸாவில் 4,600 பேர் காயமடைந்து உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்ரேலை அடைந்த அமெரிக்கா போர் விமானம் 


செவ்வாய் இரவு, அமெரிக்கா போர் விமானமும் போர் வியூக வகுப்பாளர்களும் இஸ்ரேல் நெவாடிம் விமானத் தளத்தை அடைந்தார்கள். மறுபுறம், இன்று அதிகாலை ரஷ்யா போர் விமானம் RFF8221 சிரியா வந்து சேர்ந்தது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முதல் முறையாக போர் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "இந்தப் போர் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தோல்வி. பாலஸ்தீனியர்களின் நலன்களை அமெரிக்கா புறக்கணிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். 


இஸ்ரேல் பக்கம் நிற்கும் அமெரிக்கா


இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் போர் நிலவரம் குறித்து தகவல்களை கேட்டறிந்தனர். செவ்வாய் இரவு வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் ஜோ பைடன். "அமெரிக்கா இஸ்ரேலுடன் உள்ளது. இஸ்ரேலில் மனிதாபிமானமற்ற முறையில் ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் 14 அமெரிக்க குடிமக்களும் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் ஒரு படுகொலை நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது. இது பயங்கரவாதம், ஆனால் யூத மக்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல" எனக் கூறினார். 


இஸ்ரேல் செல்லும் அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர்


இஸ்ரேலுடன் தங்கள் ஒற்றுமையைக் காட்டுவதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல் செல்லவுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் வியாழக்கிழமை இஸ்ரேல் சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க - Palestine Israel Conflict: பாலஸ்தீன்-இஸ்ரேல் இடையே ஏன் மோதல்? ஆயிரக்கணக்கான உயிர் பலிக்கு யார் காரணம்?


லெபனான் மற்றும் சிரியாவிலிருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்


லெபனானைத் தொடர்ந்து சிரியாவும் இஸ்ரேலை தாக்கியுள்ளது. சிரியாவின் துப்பாக்கிச் சூடு மற்றும் ராக்கெட் தாக்குதல்களுக்கு பீரங்கி மூலம் பதிலடி கொடுத்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. பாலஸ்தீன பிரிவினர் சிரிய பிரதேசத்தில் இருந்து இஸ்ரேலை நோக்கி ராக்கெட் தாக்குதல்களை நடத்தியதாகவும் மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.


மறுபுறம், லெபனானில் இருந்து இஸ்ரேலும் மீண்டும் தாக்கப்பட்டது. டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின் கூற்றுப்படி, லெபனானில் இருந்து 15 ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. இந்த ராக்கெட்டுகள் இஸ்ரேலின் மேற்கு நகரமான கலிலி மற்றும் தெற்கு கடற்கரை நகரமான அஷ்கெலோன் ஆகிய இடங்களில் விழுந்தன.


இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனான் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவின் 3 நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. முன்னதாக அக்டோபர் 8 ஆம் தேதி, லெபனான் எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது ஹெஸ்புல்லா துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுகளை வீசியது.


பிரதமர் மோடியிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு


பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அக்டோபர் 10 ஆம் தேதி மாலை பிரதமர் நரேந்திர மோடியை போனில் தொடர்புக் கொண்டு பேசினார். பிரதமர் மோடியிடம் போர் பற்றிய முழுத் தகவலையும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி X தளத்தில் ட்வீட் செய்து, "இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்கள் இஸ்ரேலுடன் இருக்கிறார்கள். நாங்கள் அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கும் எதிரானவர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.


காஸா எல்லையை இஸ்ரேல் கைப்பற்றியது


அக்டோபர் 10 ஆம் இஸ்ரேலிய இராணுவம் காஸா எல்லையை கைப்பற்றி முழுமையாக சீல் வைத்ததாக அறிவித்தது. காசா எல்லையில் 1 லட்சம் ராணுவ வீரர்களை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. மேலும் 3 லட்சம் ராணுவ வீரர்கள் தயாராக இருக்குமாறு உத்தரவு போடப்ட்படுள்ளது. காசா பகுதிக்கு உணவு, தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் வழங்குவதை நிறுத்துமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.


மேலும் படிக்க - Israel Hamas Conflict: விடிய விடிய தாக்குதல்.. பெண்கள், குழந்தை என இதுவரை 1600 பேர் பலி


தாக்குதலுக்கு முன் இஸ்ரேலை எச்சரித்த எகிப்து


டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் அறிக்கையின்படி, 'தாக்குதல்' தொடர்பாக இஸ்ரேலை எச்சரித்ததாக எகிப்து கூறுகிறது. இதுத்தொடர்பாக எகிப்திய உளவுத்துறை அதிகாரி கூறியதாவது, "ஏதோ பெரிய விஷயம் நடக்க உள்ளது என்று நாங்கள் இஸ்ரேலை எச்சரித்தோம். ஆனால் இஸ்ரேல் அதை கவனித்தில் கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார். எகிப்து பெரும்பாலும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்கிறது.


இஸ்ரேலை எதிரியாகக் கருதிய அரபு நாடுகளில் எகிப்தும் இருந்தது. எகிப்து மற்றும் இஸ்ரேல் இடையே பலமுறை மோதல்கள் நடந்துள்ளது. இருப்பினும், 1973 அரபு-இஸ்ரேல் போருக்குப் பிறகு 7 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இஸ்ரேலை ஒரு நாடாக எகிப்து அங்கீகரித்தது. அப்போதிருந்து, இது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் ஒரு மத்தியஸ்த நாடாகக் கருதப்படுகிறது.


இஸ்ரேலில் உள்ள 18 ஆயிரம் இந்தியர்கள் நிலை என்ன? 


இஸ்ரேலில் 18,000 இந்தியர்கள் வசித்து வருவதாக டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. தற்போது அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். இஸ்ரேல் சென்றடைந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக வெளியேறுமாறு தூதரகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


11 மாணவர்கள் நேபாள மாணவர்கள் பலி


மறுபுறம், நேபாள வெளியுறவு அமைச்சர், தனது நாட்டைச் சேர்ந்த 11 மாணவர்கள் கொல்லப்பட்டதாகவும், 4 மாணவர்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். நேபாள வெளியுறவு அமைச்சரின் கூற்றுப்படி, அவரது மாணவர்கள் 17 பேர் கிபூட்ஸ் பகுதியில் இருந்தனர். ஹமாஸ் துப்பாக்கிச் சூடு நடத்திய இடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே ஏன் தகராறு


இந்த மோதல் குறைந்தது 100 ஆண்டுகளாக நடந்து வருகிறது. மேற்குக் கரை, காசா பகுதி மற்றும் கோலன் ஹைட்ஸ் போன்ற பகுதிகளில் சர்ச்சை நீடித்து வருகிறது. கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட இந்தப் பகுதிகளுக்கு பாலஸ்தீனம் உரிமை கொண்டாடுகிறது. அதே சமயம் ஜெருசலேம் மீதான உரிமையை கைவிட இஸ்ரேல் தயாராக இல்லை.


மேலும் படிக்க - 5000 ராக்கெட்டுகள் தாக்குதல்.. 200 பேர் பலி; போரை அறிவித்த இஸ்ரேல் - அடுத்தது என்ன?


காசா பகுதி இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே உள்ளது. இந்த இடம் தற்போது ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது இஸ்ரேலுக்கு எதிரான குழு. செப்டம்பர் 2005 இல், இஸ்ரேல் காசா பகுதியில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற்றது. 2007 இல், இஸ்ரேல் இந்த பகுதியில் பல கட்டுப்பாடுகளை விதித்தது. பாலஸ்தீனம் மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் சுதந்திரமான பாலஸ்தீன அரசு அமைக்கப்பட வேண்டும் என்று கூறி வருகிறது.


இந்தியா தலையிட வேண்டும் -பாலஸ்தீன தூதர் கோரிக்கை


இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் அபு அல்ஹைஜா, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியா நட்பு நாடு என்றும், காசா பகுதியில் தற்போது நிலவும் நெருக்கடியை தீர்க்க இந்தியா தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.


மேலும் படிக்க - Palestine Israel Conflict: இஸ்ரேல் ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் இந்தியாவிடம் கோரிக்கை வைத்த பாலஸ்தீனம்


எப்பொழு இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது?


1947 இல் ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் பிரிவினையை முன்மொழிந்தது. இதில் மும்முனைப் பிரிவு குறித்து திட்டம் வகுக்கப்பட்டது. அதாவது ஜெருசலேமை சர்வதேச கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதேசமயம், யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் தனி நாடுகளை உருவாக்குவது குறித்து பேசப்பட்டது. இம்முறையும் யூதர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள் ஆனால் அரபுத் தலைவர்கள் அதை எதிர்த்தனர். 1948ல் மே 14 அன்று இஸ்ரேல் நாடு (State of Israel Declare) உருவாக்கப்பட்டது.


பாலஸ்தீன் இஸ்ரேல் இடையே மோதல் எப்பொழுது தொடங்கியது?


இஸ்ரேல் 1948 மே 14 அன்று உருவாக்கப்பட்டது. இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட நாளில் இருந்து பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் தொடங்கியது. அந்த மோதல் இன்று வரை தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.


இஸ்ரேலை தாக்கிய ஹமாஸ் போராளிகள்


இஸ்ரேலும் பாலஸ்தீன் இடையே போர் தொடங்கிவிட்டது. கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 07, 2023) அதிகாலை பாலத்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது 5000 ராக்கெட்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலாக இருந்தது. 


பிரதமர் நெதன்யாகு கடும் எச்சரிக்கை


ஹமாஸ் தாக்குதலை அடுத்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "எதிரிகளுக்கு நாங்கள் தரும் பதிலடி அவர்களின் தலைமுறை தலைமுறையாக எதிரொலிக்கும் எனக் கூறியுள்ளார். ஹமாஸ் போரை ஆரம்பித்துள்ளது. இப்போது அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். எங்கள் பகுதியில் இன்னும் ஏராளமான பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்களை விரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். பயங்கரவாதிகளை விரட்டி அவர்களை நகரத்தை காலி செய்ய வைப்பதே எங்களின் முதல் பணி" எனக் கூறியுள்ளார்.


மேலும் படிக்க - இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்: பங்குச் சந்தையில் தாக்கம்; கச்சா எண்ணெய், தங்கத்தின் விலை உயரலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ