புதுடெல்லி: காசாவைச் சேர்ந்த பாலஸ்தீனிய போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் மே 11 அன்று கொல்லப்பட்ட இந்திய பராமரிப்பாளரான சௌம்யா சந்தோஷ் குடும்பத்தினருடன் இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லின் (Reuven Rivlin) புதன்கிழமை (மே 19) பேசியதோடு, தனது இரங்கலையும் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்ரேலிய அதிபர் சௌம்யா குடும்பத்தினருடன் நடத்திய உரையாடலின் விவரங்கள் கிடைக்கவில்லை. எனினும், ரிவ்லின் ஆலோசகர் பி.டி.ஐ-க்கு அளித்த தகவலில் இஸ்ரேலிய அதிபர் சௌம்யாவின் குடும்பத்துடன் பேசினார் என்பதை உறுதிப்படுத்தினார்.


கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான சௌம்யா சந்தோஷ், தெற்கு இஸ்ரேலிய கடலோர நகரமான அஷ்கெலோனில் உள்ள ஒரு வீட்டில் ஒரு வயதான பெண்மணியின் பராமரிப்பாளராக பணிபுரிந்தார்.


மே 11 ம் தேதி மாலை சௌம்யா தன் கணவர் சந்தோஷுடன் ஒரு வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருந்தார். அப்போதுதான், காசாவிலிருந்து (Gaza) ஏவப்பட்ட ராக்கெட் நேரடியாக வந்து அவர் இருந்த வீட்டைத் தாக்கியது. 


ALSO READ: ஹமாஸ் தாக்குதலில் இறந்த இந்திய நர்ஸ்; நேரில் சென்று இரங்கல் தெரிவித்த இஸ்ரேல் தூதர்


சௌம்யா சந்தோஷ் கடந்த ஏழு ஆண்டுகளாக இஸ்ரேலில் (Israel) வசித்து வந்தார். அவர் ஒரு பணிப்பெண்ணாக அங்கு பணிசெய்து கொண்டிருந்தார். அவருக்கு ஒரு ஒன்பது வயது மகன் உள்ளான். சௌம்யாவின் மகனும் கணவனும் கேரளாவில் வசிக்கின்றனர். 


சௌம்யா யாருக்கு பணிப்பெண்ணாக பணிபுரிந்தாரோ, அந்த 80 வயது மூதாட்டி, அவர் வீட்டின் மீது நடந்த நேரடி ராக்கெட் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காயப்பட்ட அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 


ராக்கெட் ஷெல்டர் அவர்கள் வீட்டிலிருந்து ஒரு நிமிட தூரத்தில் இருந்தது. ஆனால், அவர்களால் சரியான நேரத்தில் அந்த ஷெல்டரை அடைய முடியவில்லை. அவர்கள் இருந்த வீட்டில் தாக்குதலில் இருந்து காக்கும் பாதுகாப்பான அறை இல்லை. 


சௌம்யாவின் உடல் மே 14 அன்று விசேஷமாக ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு மறுநாள் அவரது சொந்த ஊரை அடைந்தது.


இந்தியாவுக்கான (India) இஸ்ரேலின் தூதர் டாக்டர் ரான் மல்கா, சென்ற வாரம் சௌம்யாவின் குடும்பத்துடன் பேசி இரங்கல் தெரிவித்தார். 


"இஸ்ரேல் அரசின் சார்பாக, அப்பாவி மக்கள் மீதான ஹமாஸின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிர் இழந்த திருமதி. சௌம்யா சந்தோஷின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் தாயை இழந்த அவரது 9 வயது மகனின் நிலை வருத்தம் அளிக்கிறது.” என்று மல்கா ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.


"ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலில் இறந்த சௌம்யா சந்தோஷின் குடும்பத்துடன் நான் இப்போது பேசினேன். ஈடு செய்ய முடியாத அவர்களது துன்பத்துக்கு நான் என் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்ரேல் அரசு சார்பாக எனது இரங்கலைத் தெரிவித்தேன். அவரது இறப்புக்கு நாடு முழுதும் இரங்கல் தெரிவிக்கிறது, நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக உள்ளோம்" என அவர் தனது ட்வீட்டில் மேலும் கூறியுள்ளார். 


இந்த தாக்குதல் 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் தனது பெற்றோரை இழந்த சிறிய மோசேயை நினைவூட்டியது என்று இஸ்ரேலிய தூதர் கூறினார்.


"தன் தாயை இந்த சிறிய வயதில் இழந்த அவரது 9 வயது மகன் அடோனை நினைத்து வருத்தமடைகிறேன். இந்த தாக்குதல் சிறிய மோசேயை நினைவூட்டுகிறது. 2008 ஆம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலில் அவர் தன் பெற்றோரை இழந்தார். அவர்களுக்கு தேவையான வலிமையை கடவுள் அவர்களுக்கு அளிக்கட்டும்" என்று மல்கா மேலும் கூறினார்.


ALSO READ: இஸ்ரேலுக்கு எதிராக அணி திரளும் இஸ்லாமிய நாடுகள்; மூன்றாம் உலகப்போர் மூளுமா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR