இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்; பொதுவான நிலைபாட்டை எடுக்க முடியாமல் திணரும் ஐரோப்பிய யூனியன்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான பிரச்சனை முதல் உலகப் போர் காலத்தில் இருந்தே உள்ளது. இரண்டு நாடுகளுமே ஜெருசலேம் தான் எங்களின் தலைநகர் என்று உரிமை கொண்டாடி வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 18, 2021, 04:52 PM IST
  • பெல்ஜியம், அயர்லாந்து, சுவீடன் மற்றும் லக்சம்பர்க் ஆகியவை இஸ்ரேலை கடுமையான விமர்சனம் செய்யும் நாடுகளில் அடங்கும்.
  • ஆதரவளிக்கும் நாடுகளில் சில இஸ்ரேலுடன் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
  • பிரான்ஸ் ஒன்றும் சொல்லாமல் நடுநிலையாக இருக்கிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்; பொதுவான நிலைபாட்டை எடுக்க முடியாமல் திணரும் ஐரோப்பிய யூனியன் title=

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான பிரச்சனை முதல் உலகப் போர் காலத்தில் இருந்தே உள்ளது. இரண்டு நாடுகளுமே ஜெருசலேம் தான் எங்களின் தலைநகர் என்று உரிமை கொண்டாடி வருகிறது. ஏனெனில், ஜெருசலம் பகுதியை இரு நாடுகளுமே தங்களின் புனித பூமியாக பார்க்கிறது. ஜெருசலேம் மட்டுமின்றி காசா, மேற்கு கரை போன்ற பகுதிகளும் தங்களுக்கு தான் சொந்தம் என இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.

இந்நிலையில், கிழக்கு ஜெருசலேமில், அல்-அக்ஸா மசூதியில், இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேலிய காவல் துறை மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதை அடுத்து காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் ஜெருசலேம் நோக்கி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை  வீசியது. ஆனால், இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பான Iron Dome  தாக்குதலை முறியடித்தது.

அதை தொடர்ந்து சனிக்கிழமையன்று, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசா (Gaza) பகுதியில், இருந்த அல்ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் மற்றும் பிற செய்தி ஊடகங்களின் அலுவலகங்கள் இருந்த மிகப்பெரிய கட்டிடம் தகர்க்கப்பட்டது. 

இதை அடுத்து, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) அனைத்து 57 நாடுகளும் ஞாயிற்றுக்கிழமை (மே, 16ம்தேதி), அவசர கூட்டம் ஒன்றை கூட்டியது.  ஆனால், அவர்களிடையே கருத்து ஒற்றுமை இல்லாததால், முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. 

ALSO READ | Jerusalem: மூன்று மதங்களின் புனித இடமாக திகழும் ஜெருசலத்தின் சுவாரஸ்ய வரலாறு

 

அதே போன்று இந்த விஷயத்தில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இடையேயும் கருத்து ஒற்றூமை இல்லை.  ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளில் பெல்ஜியம், அயர்லாந்து, சுவீடன் மற்றும் லக்சம்பர்க் ஆகியவை இஸ்ரேலை கடுமையான விமர்சனம் செய்யும் நாடுகளில் அடங்கும். மறுபுறம், ஹங்கேரி, ருமேனியா மற்றும் பல்கேரியா ஆகியவை இஸ்ரேலை தீவிரமாக ஆதரிக்கும் நாடுகள். ஜெர்மனி, ஆஸ்திரியா, கிரீஸ், சைப்ரஸ் மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவளித்துள்ளன. ஆதரவளிக்கும் நாடுகளில் சில இஸ்ரேலுடன் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. பிரான்ஸ் ஒன்றும் சொல்லாமல் நடுநிலையாக இருக்கிறது.

இத்தகைய சிக்கல்கள் காரணமாக, இஸ்ரேல் பாலஸ்தீனம் விஷயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இன்றுவரை சர்வதேச அளவில் eந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

ALSO READ | Watch: இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் தகர்ந்த அல்ஜசீரா, பிற ஊடகங்களின் 12 மாடி கட்டிடம்

 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

 

Trending News