கிழக்கு ஜெருசலேமில், அல்-அக்ஸா மசூதியில், இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேலிய காவல் துறை மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதை அடுத்து காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் ஜெருசலேம் நோக்கி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசியது. ஆனால், இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பான Iron Dome மூலம் இவை தடுத்து நிறுத்தப்பட்டதால், பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.
சனிக்கிழமையன்று, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காசா (Gaza) பகுதியில், இருந்த அல்ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் மற்றும் பிற செய்தி ஊடகங்களின் அலுவலகங்கள் இருந்த மிகப்பெரிய கட்டிடம் தகர்க்கப்பட்டது.
இஸ்ரேல்-ஹமாஸ் (Israel - Hamas) இடையிலான மோதல்கள் தொடர்ந்து இரு வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) அனைத்து 57 நாடுகளும் ஞாயிற்றுக்கிழமை (மே, 16ம்தேதி), அவசர கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையில் பதற்றம் தொடங்கியதில் இருந்து, முதல் முறையாக இஸ்லாமிய நாடுகள் கூட்டாக எடுத்துள்ள முதல் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | தீவிரமடையும் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்; அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கவலை
பல அரபு நாடுகள் பாலஸ்தீனியர்களுக்கு, தனி நாடு வேண்டும் என்று வலியுறுத்தினாலும், OIC அமைப்பின் பல உறுப்பு நாடுகளுடன் இஸ்ரேஸ் பல ஒப்பந்தங்கள் செய்துள்ளதை அடுத்து, பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சில நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை நடந்த அவசரக் கூட்டத்தில், பாலஸ்தீன வெளியுறவு மந்திரி ரியாட் மால்க் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களை கண்டித்து, அதை 'கோழைத்தனமான தாக்குதல்கள்' என்று குறிப்பிட்டார்.
இஸ்லாமிய நாடுகள் இடையே இந்த விஷயத்தில் கருத்து ஒற்றுமை இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம் தான் என்றாலும், இந்த மோதல் மூன்றாம் உலக போராக மாறுமா என்பதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான பிரச்சனை முதல் உலகப் போர் காலத்தில் இருந்தே உள்ளது. இரண்டு நாடுகளுமே ஜெருசலேம் தான் எங்களின் தலைநகர் என்று உரிமை கொண்டாடி வருகிறது. ஏனெனில், ஜெருசலம் பகுதியை இரு நாடுகளுமே தங்களின் புனித பூமியாக பார்க்கிறது. ஜெருசலேம் மட்டுமின்றி காசா, மேற்கு கரை போன்ற பகுதிகளும் தங்களுக்கு தான் சொந்தம் என இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.
ALSO READ | Watch: இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் தகர்ந்த அல்ஜசீரா, பிற ஊடகங்களின் 12 மாடி கட்டிடம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR .