துருக்கி தலைநகர் இஸ்தான்புல் தலைமை சர்வதேச விமானநிலையத்தில் 3 பயங்கரவாதிகள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இஸ்தான்புல் சர்வதேச விமானநிலையத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த பயணிகளை கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினர். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு அச்சத்தில் உறைந்த பயணிகள் அலறிக்கொண்டு ஓடினர். இதற்கிடையே தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் விமான நிலையத்திற்கு வந்து தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விமானநிலையம் நோக்கி ஆம்புலன்ஸ்கள் விரைந்தது. பாதுகாப்பு படையினர் அதிரடியாக பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்த முயற்சித்த போது அவர்கள் தாங்கள் உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தனர், வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது.


இந்த பயங்கரவாத தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தாக்குதல்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்தினர் என்று கூறப்பட்டு உள்ளது. துருக்கி தொடர்ச்சியாக ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொலைவெறி தாக்குதலைகளை எதிர்கொண்டு உள்ளது. இஸ்தான்புல் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். 


பயங்கரவாத தாக்குதலுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் பிரதமர் இல்ட்ரிம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று துருக்கி கேட்டுக் கொண்டு உள்ளது.


மேலும் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியது ஐ.எஸ். பயங்கரவாதிகள்தான் என்பதை முதல்கட்ட விசாரணை தெரிவிக்கிறது என்று துருக்கி பிரதமர் பின்அலி இல்ட்ரிம் செய்தியாளர்களிடம் கூறிஉள்ளார்.  விமான நிலையத்திற்கு பயங்கரவாதிகள் டாக்சியில் வந்து தாக்குதல் நடத்தி உள்ளனர் என்றும் தாக்குதலை முன்னெடுத்த பயங்கரவாதிகள் எந்த நாட்டவர் என்பது தெரியவில்லை என்றும் கூறிஉள்ளார்.