ஜகார்த்தா: சமீபத்தில் இந்தோனேஷிய சிறை அதிகாரிகளை ஒரு சம்பவம் அதிர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது. சிறையில் இருந்த சீன போதைப்பொருள் கடத்தல்காரன் 30 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையை அமைத்து தப்பித்தது குறித்து அறிந்ததும், அவர்களால் இதை நம்ப முடியவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கெய் ஜி ஃபான் (Cai Ji Fan) என்ற கடத்தல்காரனுக்கு 2017 ஆம் ஆண்டு 110 கிலோகிராம் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சீன போதைப்பொருள் கடத்தல்காரன் தலைநகர் ஜகார்த்தா (Jakarta) அருகே பான்டனின் டாங்கிரென் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவன் தோண்டிய சுரங்கம் ஒரு கால்வாயுடன் இணைக்கப்பட்டிருந்தது.


தப்பிப்பதில் வல்லவன் Cai Ji Fan


அந்த போதைப்பொருள் கடத்தல்காரன் தப்பிப்பது இது இரண்டாவது முறையாகும் என்று டெங்ராங் காவல்துறைத் தலைவர் சுகெங் ஹரியந்தோ கூறினார். ரிமாண்டில் இருந்தபோது, ​​ஜகார்த்தாவில் உள்ள தேசிய போலீஸ் குற்ற புலனாய்வு பிரிவில் இருந்து அவர் தப்பினான். சுரங்கப்பாதை தோண்டுவதற்கான திட்டத்தில் அந்த கைதி மற்ற கைதிகளை ஈடுபடுத்த முயற்சித்ததாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் யாரும் அதற்குத் தயாராக இல்லை. எனவே அவன் ஒரே ஆளாக முழு சுரங்கத்தையும் தோண்டியுள்ளான்.


முன்னதாக 2017 ஜனவரியில், அவன் இரும்பு கம்பியால் குளியலறையின் சுவரைத் துளைத்து அதன் மூலம் தப்பிச் சென்றான். அவன் மற்ற கைதிகளுடன் 2.5 மீட்டர் சுவரில் ஏறி தப்பினான், ஆனால் மேற்கு ஜாவாவிலிருந்து (West Java) மூன்று நாட்களுக்குள் மீண்டும் கைது செய்யப்பட்டான்.


ALSO READ: சீன அதிபர் Xi Jinping-ஐ கோமாளி என கூறிய நபருக்கு 18 ஆண்டுகால சிறை தண்டனை!!


உளி, திருகு ஆகியவற்றால் சுரங்கம்


30 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை தோண்டுவது எளிதான காரியமல்ல. இதற்கு பல மணி நேரம் மற்றும் கருவிகள் தேவை. ஆனால் இந்தோனேசிய காவல்துறை அதிகாரிகள் ஒரு கியோஸ்க், உளி, ஸ்க்ரூடிரைவர் மற்றும் சில உபகரணங்களை மட்டுமே மீட்டுள்ளதாக கூறுகிறார்கள். சிறை சமையலறையில் கட்டுமானப் பணிகளின் போது அவனுக்கு இந்த கருவிகள் கிடைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


இந்தோனேசியாவில் சிறையிலிருந்து தப்புவது வழக்கமான ஒரு விஷயம்


இந்தோனேசியாவில் (Indonesia) , சிறையிலிருந்து தப்பிப்பது மிகவும் பொதுவானதாகிவிட்டது. சிறையில் அதிக எண்ணிக்கையிலான கைதிகள் இருப்பதே இதற்கு மிகப்பெரிய காரணம். 2018 ஆம் ஆண்டில், பிரார்த்தனைக் கூட்டத்தின் போது சுவரை உடைத்து சுமார் 90 கைதிகள் பண்டா ஆச்சே சிறையில் இருந்து தப்பினர். ஒரு வருடத்திற்கு முன்பு 400 க்கும் மேற்பட்ட கைதிகள் ரியாவ் மாகாண சிறையிலிருந்து தப்பினர். மேலும் 2017 ஆம் ஆண்டில், நான்கு வெளிநாட்டினர் பாலியின் (Bali) பிரபலமான கெரோபோகன் சிறையிலிருந்து தப்பி ஓடினர்.


ALSO READ: China hackers இந்திய அரசின் வலைத்தளங்களை குறிவைக்கலாம் என பாதுகாப்பு அமைப்புகள் கவலை


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR