உலகின் பல நாடுகளில் தற்போது பொருளாதார மந்தநிலை நிலவுவதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வணிகர்கள், பொதுமக்கள் என பலரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அமேசான் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான ஜெஃப் பெஸாஸ், மக்களுக்கு நிதி சேமிப்பு குறித்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது,"இந்த விடுமுறை தினங்களில் நிலவும் பொருளாதார மந்தநிலையை சமாளிக்க வேண்டும் என்றால், பெரும் நிதி கொடுத்து பொருள்கள் வாங்கும் முடிவை சில காலம் தள்ளிவைக்க வேண்டும். தற்போது மக்கள் நிதியை சேமித்து வைக்க வேண்டும். வரும் மாதங்களில் தேவையில்லாத செலவுகளை தவிர்க்கவும். புதுகார், டிவி போன்ற அமெரிக்க குடும்பங்கள் வாங்குவதை தவிர்க்கவும். ஏனென்றால், அமெரிக்காவில் தற்போது மந்தநிலை ஏற்பட உள்ளது. 


மேலும் படிக்க | தந்தைக்கு உல்லாச அழகிகளை விருந்தாக்கிய மகள்... 100ஆவது பிறந்தநாளுக்கு பரிசு!


தொழிலும் சிறிது சிக்கனத்தை கடைபிடித்தால் கொஞ்சம் பலனளிக்கும். வருங்காலத்தில் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டாலும் நீங்கள் அதை தாங்கிக்கொள்ள முடியும். 


நீங்கள் ஒரு பெரிய திரை டிவியை வாங்க நினைத்துள்ளீர்கள் என்றால், நீங்கள் சற்று காத்திருந்து, உங்கள் பணத்தை தக்கவைத்து, என்ன நடக்கிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும். புதிய ஆட்டோமொபைல், குளிர்சாதனப் பெட்டி அல்லது வேறு எதுவாக இருந்தாலும் இதையேதான் கூறுவேன். பொருளாதாரம் தற்போது சரியாக இல்லை. அனைத்தும் சற்று சுணக்கம் காண்கிறது. பலதுறைகளில் உள்ள நிறுவனங்கள் தற்போது ஆட்குறைப்பு நிறுவனத்தில் ஈடுப்பட்டு வருகின்றன" என்றார். 


ஜெஃப் பெஸாஸ், அமேசான் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்து வருகிறார். இந்நிறுவனங்களில் தற்போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. பெரும் நிறுவனங்களான ட்விட்டர், பேஸ்புக் (மெட்டா) நிறுவனங்களும் பெரும் ஆட்குறைப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | Netflix பயனர்களுக்கு ஷாக்: இனி இதை செய்ய முடியாது, புதிய அம்சம் அறிமுகம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ