Gun Shoot At Church: ஜெர்மனி ஹம்பர்க் தேவாலய துப்பாக்கிச் சூட்டில் பலர் பலி என்ற அச்சமூட்டும் தகவல்கள் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது. தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக ஜெர்மனி காவல்துறை உறுதி செய்ததுடன், "ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறியப்படாத" ஆசாமிகள் இந்த துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 Grossborstel மாவட்டத்தில் உள்ள Deelboege தெருவில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பலர் பலத்த காயம் அடைந்தனர், சிலர் மரணமடைந்துள்ளனர்  என்று ஜெர்மன் போலீசார் ட்விட்டரில் தெரிவித்தனர்.



"தற்போது குற்றத்தின் நோக்கம் குறித்து நம்பகமான தகவல்கள் எதுவும் இல்லை," என்று டிவிட்டர் செய்தி தெரிவிக்கிறது. காவல்துறையால் பேரழிவு எச்சரிக்கை செயலி மூலம் பாதிக்கப்பட்ட பகுதியில் "தீவிர ஆபத்து" குறித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது.


மேலும் படிக்க | நிலவில் கால்வைத்த 3ஆவது மனிதர்... 93 வயதில் செய்த காரியத்தை பாருங்க - இளமை ஊஞ்சலாடுது!


குடியிருப்பாளர்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும், அப்பகுதிக்கு செல்வதைத் தவிர்க்குமாறும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர், மேலும் அவர்கள் தேவாலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளை சுற்றி வளைத்துள்ளனர்.


சரியான இறப்பு எண்ணிக்கை எதுவும் தெரியவில்லை, ஆனால் குறைந்தது ஏழு பேர் இறந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் கணித்துள்ளன, மேலும் எட்டு பேர் காயமடைந்தனர் என்பதை செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.


ஆயுதம் ஏந்திய போலீசார் கட்டிடத்திற்குள் நுழைவதையும், தலைக்கு மேல் கைகளை வைத்து மக்களை வெளியே அழைத்துச் செல்வதையும் தொலைகாட்சி செய்திகள் காட்சிகள் காட்டுகின்ரன.  


மேலும் படிக்க | Adani: அதானி குழுமத்திற்கு கடன் பிரச்சனையை விட பெரிய பிரச்சனை இருக்கு! அதிர்ச்சி தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ