Adani Group Raising Problems: கௌதம் அதானி மற்றும் அவரது அதானி குழுமம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் கடன் பிரச்சனைகளை விட மூலதனச் சந்தை மற்றும் மதிப்பீட்டு பிரச்சனைகளுடன் தொடர்புடையவை என்று கோடக் மஹிந்திரா வங்கியின் தலைவர் மற்றும் மொத்த வங்கித் தலைவர் பரிதோஷ் காஷ்யப் கூறினார்.
கோடக் மஹிந்திரா வங்கியும் அதானி குழுமமும்
அதானி குழுமத்திற்கு வழங்கிய கடன் குறித்து அறிக்கை அளித்த கோடக் மஹேந்திரா வங்கி, விதிகளின்படி கடன் வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது. அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கைக்குப் பிறகு, குழுமத்தின் பங்குகளின் மதிப்பு கணிசமாகக் குறைந்தன. இதற்குப் பிறகு பல வங்கிகளும், அதானி நிறுவனத்திற்கு கொடுத்த கடன் தொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களாக அதானி குழுமம் தொடர்பான பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. இதன் விளைவாக, பிரச்சனையால் சொத்து மதிப்பில் கீழிறங்கிய கெளதம் அதானி, உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில் 22வது இடத்திற்கு முன்னேறிவிட்டார். இதனிடையே, அதானி குழுமத்துக்கு அளிக்கப்பட்ட கடன் குறித்த கோடக் மஹிந்திரா வங்கியின் அறிக்கை வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | ஆதார்-பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது?
வங்கியின் விதிமுறைகளின்படி கடன் வழங்கப்பட்டது
வங்கியின் விதிமுறைப்படி அதானி குழுமத்திற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும், கடன் தொகையும் குறைவாகவே உள்ளதாகவும் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கோடக் மஹிந்திரா வங்கியின் தலைவரும் தலைவருமான பரிதோஷ் காஷ்யப் இது பற்றி தெரிவித்தார்,
அதானி குழுமம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் கடன் பிரச்சினைகளை விட மூலதனச் சந்தைகள் மற்றும் மதிப்பீட்டு சிக்கல்களுடன் தொடர்புடையவை என்று அவர் தெரிவித்தார்..
'அதானி குழுமத்திற்கு நாங்கள் கொடுத்த கடன் தொகை குறைவாக உள்ளது. நாட்டிலுள்ள ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனத்துடனும் வணிகம் செய்கிறோம், நாங்கள் வழங்கும் கடன்கள் எங்கள் கொள்கைகள் மற்றும் எங்களின் இருப்புநிலைக் குறிப்பின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் கடன் வழங்குகிறோம். அதானி குழுமத்தில் செயல்படும் நிறுவனங்கள் நியாயமான லாபத்தில் உள்ளன. அவை, வலுவான லாபம் மற்றும் இருப்புநிலைக் குறிப்பைக் கொண்டுள்ளன’ என்று பரிதோஷ் காஷ்யப் தெரிவித்தார்.
நியூயார்க்கை தளமாகக் கொண்ட 'ஹிண்டன்பர்க்' நிறுவனம் ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தொழிலதிபர் கௌதம் அதானி தலைமையிலான குழு, 'பங்குகளை கையாளுதல் மற்றும் கணக்கு மோசடியில்' ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது. நிறுவனத்தின் இந்த குற்றச்சாட்டுக்குப் பிறகு, பல்வகை வணிகங்களில் ஈடுபட்டிருக்கும் அதானிக் குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.
மேலும் படிக்க | Jackpot! லட்சங்களை அள்ளித் தரும் ‘ஒரு ரூபாய்’ நோட்டு உங்க கிட்டே இருக்கா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ