ஹோலி என்ற பெண்மணி தனது கல்லூரிப்படிப்பை முடித்தவுடன் அமெரிக்காவின் சவுத் வெஸ்ட் விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக தனது விமானப் பயணத்தைத் தொடங்கினார். ஒரு விமானி ஆக வேண்டும் என விரும்பிய அவர், தனது மகள் கெல்லிக்கு இரண்டு வயதாக இருந்தபோது, விமானி ஆவதற்குப் பயிற்சி மேற்கொண்டார்.  அவருக்கு கெல்லி உட்பட 3 குழந்தைகள் இருந்தாலும் ஹோலி தனது கனவைக் கைவிடவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹோலி கடந்த 18 வருடங்களாக விமானியாகப் பணியாற்றி வருகிறார். தாயைக் கண்டு தானும் விமானி ஆக வேண்டும் என முடிவு செய்த கெல்லி, 14 வயதில் இருந்தே அதற்காக பயிற்சி மேற்கொண்டார். விமானி உரிமம் பெற்ற பிறகு, அவர் 2017-இல் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸில் இன்டர்ன்ஷிப்பைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து, 2-வது வாய்ப்பே இல்லாமல் அவர் சவுத் வெஸ்ட் நிறுவனத்தின் விமானியாகப் பணிக்கு சேர்ந்தார். 


மேலும் படிக்க | Cartwheel Galaxy: சுழலும் வண்ண வளையத்தை வெளிப்படுத்தும் கார்ட்வீல் கேலக்ஸியின் புதிய படம்


இவர்கள் இருவரும் கடந்த 23-ம் தேதி டென்வரில் இருந்து செயின்ட் லூயிஸுக்கு சென்ற விமானத்தில் ஒன்றாகப் பணியாற்றினர். தனது மகளை விமானத்தில் உள்ள பயணிகளுக்கு அறிமுகப்படுத்திய ஹோலி,  இந்த நாள் தனக்கு ஒரு சிறப்பு நாள் எனக் குறிப்பிட்டுள்ளார்.  இந்த வீடியோவை சவுத்வெஸ்ட் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 


 



தான் இந்த வேலையில் மிகவும் விரும்பி இணைந்ததாகவும், தன்னைப் போலவே தனது மகளும் இந்த வேலையின் மேல் காதல் கொண்டுள்ளதாகவும் ஹோலி கூறியுள்ளார். இந்த சாதனை தாய் - மகள் குறித்த பதிவுகள் சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளன. 


மேலும் படிக்க | அய்மன் - அல் - ஜவாஹிரி : மருத்துவரில் இருந்து அல்கொய்தா தலைவரானது எப்படி?


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ