கிம் ஜாங் உன் எச்சரிக்கை: கொரோனா பரவலை குறைக்க மருந்து நிர்வாகம் அவசியம்
நாட்டில் கொரோனா இல்லை என்று சொல்லிவந்த கிம் ஜாங் உன், நிலைமை கட்டுக்குள் இல்லாமல் போனதை உணர்ந்து, மருந்துகளை சீராக விநியோகம் செய்ய ராணுவத்திற்கு உத்தரவிட்டிருக்கிறார்
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதால் மருந்து விநியோகத்தை முறைப்படுத்துவது அவசியம் என வட கொரியாவின் இராணுவத்திற்கு, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார்
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், பியாங்யாங்கில் உள்ள ஒரு மருந்தகத்தை ஆய்வு செய்யும் போது, கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் முகக்கவசத்தைஅணிந்துள்ள புகைப்படத்தை ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது.
25 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட வட கொரியாவில் 'அடையாளம் தெரியாத காய்ச்சலால்' மேலும் எட்டு இறப்புகள் பதிவாகியுள்ளது.
கடந்த 12-ம் தேதி நாட்டில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது.
பியாங்யாங்கில் உள்ள டேடாங் ஆற்றுக்கு அருகில் உள்ள மருந்தகங்களை கிம் ஆய்வு செய்ததாக வடகொரியாவின் அரசு ஊடகம் KCNA தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | மூன்றே நாளில் 8 லட்சம் பேருக்கு கொரோனா.. ஆபத்தான நிலையில் வடகொரியா
இந்த ஆய்வுக்கு முன்னதாக, கிம் ஜாங் உன், அவசர பொலிட்பீரோ கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில், அதிகாரிகளின் "பொறுப்பற்ற" பணி அணுகுமுறையை விமர்சித்தாக கூறப்படுகிறது.
அரசால் கொள்முதல் செய்யப்படும் மருந்துகள், மருந்தகங்கள் மூலம் சரியான நேரத்தில் மற்றும் துல்லியமான முறையில் மக்களைச் சென்றடைவதில்லை என்று அவர் அமைச்சரவை மற்றும் பொது சுகாதாரத் துறையை கிம் கண்டித்தார்.
"பியோங்யாங் நகரில் மருந்துகள் விநியோகத்தை உடனடியாக நிலைப்படுத்த வேண்டும்" என உத்தரவிட்ட கிம்அதற்காக சிறப்புப் பிரிவையும் உருவாக்கியுள்ளார்.
உலகிலேயே மிக மோசமான சுகாதாரப் பாதுகாப்பு முறையை கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றான வடகொரியாவில் கொரோனா அதிகரிப்பது குறித்து சுகாதார நிபுணர்கள் கவலைகளை எழுப்பியுள்ளனர்,
மேலும் படிக்க | வடகொரியாவில் கொரோனாவுக்கு முதல் பலி
கொரோனா வைரஸ் காரணமாக, உலகமே லாக்டவுன், பயண கட்டுப்பாடுகள், பொதுவெளியில் செல்வதற்கு பாதுகாப்பு முறைகள், தடுப்பூசி என நோய் எதிர்ப்பு வழிமுறைகளை மும்முரமாக செயல்படுத்தியது.
ஆனால், வடகொரியாவில் கொரோனா பாதிப்பே இல்லை என்று சில வாரங்களுக்கு முன்பு வரை அந்நாடு தெரிவித்து வந்தது. வடகொரியா உருவானதில் இருந்து இவ்வளவு வீரியம் மிக்க நோய் பரவுவது இதுவே முதல் முறை என தற்போது அதிபர் கிம் ஜாங் உன் குறிப்பிட்டுள்ளார்.
சீனா மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) அதன் COVAX திட்டத்தின் கீழ் வட கொரியாவுக்கு தடுப்பூசிகளை வழங்க முன்வந்த போதிலும், கிம் ஜாங் உன் அதை நிராகரித்துவிட்டார்.
இந்த சூழ்நிலையில், வடகொரியாவில் கொரோனா அதிகரிப்பு, சர்வதேச அளவில் கவலைகளை அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | வடகொரியாவில் முதன்முறையாக கொரோனா...நாடு முழுவதும் ஊரடங்கு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe