ஜெருசலேம் மீண்டும் பதற்றத்தின் மையமாக மாறியுள்ளது. கடந்த பல வாரங்களாக நகரத்தில் பாலஸ்தீன பயங்கரவாத அனைப்பான ஹமாஸுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன.  உலகின் மிக அறிவார்ந்த சமூகமாக கருதப்பட்டும் யூதர்கள், ஹிட்லர் என்னும் கொடுங்கோலனால் சித்தரவதை செய்யப்பட்டு, உலகின் அனைத்து இடங்களுக்கு ஓடி, கடைசியாக பெற்ற இடம் தான் இஸ்ரேல். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்ரேலின் (Israel) தலைநகரான ஜெருசலேம் ஒன்றல்ல, மூன்று மதங்களின் புனித இடமாக கருதப்படுகிறது. ஆனால் ஜெருசலேம் குறித்து இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான சர்ச்சையும் மிகவும் பழமையானது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இரண்டும் ஜெருசலேமை தங்கள் தலைநகராகக் கூறுகின்றன. ஜெருசலேம் ஒரு முக்கியமான சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது, ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து லட்சக் கணக்கான மக்கள் இங்கு வருகிறார்கள்.


ஜெருசலேம், யூத மதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் இவை மூன்றின் புனித நகரங்கள். இந்த நகரம் பண்டைய யூத அரசின் தலைநகராகவும் இருந்துள்ளது என்பதை வரலாறு காட்டுகிறது. ரோமானியர்களால் அழிக்கப்பட்ட யூதர்களின் பரிசுத்த சாலமன் ஆலயம் இங்கே இருந்தது. இந்த சாலமன் ஆலயம் தான் முதல் ஆலயம் என்று பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோயில் கிமு 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த கோவிலின் எச்சங்கள் இன்னும் அங்கே உள்ளன.


ALSO READ | ஹமாஸ் ஏவிய ராக்கெடுக்களில் இருந்து இஸ்ரேலை பாதுகாத்த Iron Dome


இயேசு கிரிஸ்து மறித்த நகரம் ஜெருசலேம் (Jerusalem), அதாவது அவர் சிலுவையில்  அறையப்பட்ட இடம். கிறிஸ்துவின் கல்லறை 'புனித செபுல்கர் தேவாலயம்' க்குள் உள்ளது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான கிறிஸ்தவர்களுக்கு மத நம்பிக்கையின் முக்கிய மையமாக இது திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் இயேசுவின் கல்லறைக்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.


இந்த நகரத்தில் 150 க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் மற்றும் 70 க்கும் மேற்பட்ட மசூதிகள் உள்ளன. இந்த தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் தவிர, இங்கேயும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்பது நிறைய இருக்கிறது. இஸ்ரேல் அருங்காட்சியகம், யாத் பாசிம், நோபல் சரணாலயம், குவாவத் அல் சாகரா, முசலா மர்வான், சாலமன் கோயில், மேற்கு சுவர், டெபிட்ஸ் டோம் போன்றவை நிச்சயம் பார்க்க வேண்டிய இங்குள்ள முக்கிய இடங்கள்


ஜெருசலேமில் ஒரு பண்டைய அல் அக்சா மசூதி உள்ளது. இஸ்லாத்தின் தோற்றம் இந்த மசூதியில் இருந்து கருதப்படுகிறது. இஸ்லாத்தின் தீர்க்கதரிசி முஹம்மது இந்த இடத்திலிருந்து சொர்க்கத்திற்கு புறப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த மசூதியின் குறிப்பு குர்ஆன் ஷெரீப்பிலும் உள்ளது. இந்த புனித தளத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். ஜெருசலேம் முஸ்லிம்களுக்கான மூன்றாவது புனிதமான தளமாக கருதப்படுகிறது. முதல் புனித இடம் மக்காவாகவும், இரண்டாவது மதீனாவாகவும் கருதப்படுகிறது.


ALSO READ | கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும்: போப் பிரான்ஸிஸ்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR